செய்திகள்

'இன்ஹேலர் பயன்பாட்டை சுயமாக நிறுத்தக் கூடாது'

தினமணி

ஆஸ்துமா நோயாளிகள் இன்ஹேலர் பயன்பாட்டை மருத்துவர்கள் ஆலோசனையின்றி சுயமாக நிறுத்தக் கூடாது என்று நுரையீரல் நிபுணர்கள் அறிவுறுத்தினர்.
உலக ஆஸ்துமா விழிப்புணர்வு தினத்தை (மே 2) முன்னிட்டு, நுரையீரல் மருத்துவ நிபுணர்கள் ஆர்.நரசிம்மன், ஸ்ரீதர் ஆகியோர் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியது: நீண்ட கால சிகிச்சை தேவைப்படும் நோய்களில் ஆஸ்துமாவும் ஒன்று. ஆஸ்துமா நோயாளிகள் பலர் சிகிச்சைக்குப் பின்பு சிறிது முன்னேற்றம் தெரிந்த உடனே இன்ஹேலர் பயன்படுத்துவதை நிறுத்தி விடுகின்றனர். இது ஆஸ்துமா நோயில் இருந்து குணமடைவதில் இருந்து பின்னடைவை ஏற்படுத்தும். இன்ஹேலர் பயன்பாட்டை மருத்துவர்கள் ஆலோசனையின்றி, நோயாளிகள் சுயமாக நிறுத்துவது பல்வேறு ஆபத்தான விளைவுகளை உண்டாக்கும்.
மருந்துகள் உட்கொள்வதைக் காட்டிலும் இன்ஹேலர் பயன்பாட்டில் பக்க விளைவுகள் குறைவு. அனைத்து வயதினர், கர்ப்பிணிகளும் இதைப் பயன்படுத்த முடியும். பிற மருந்துகளைக் காட்டிலும் இன்ஹேலருக்கான செலவு மிகவும் குறைவு. எனவே, ஆஸ்துமா நோயாளிகள் தயக்கம் காட்டாமல், மருத்துவர்கள் ஆலோசனைப்படி இன்ஹேலரைப் பயன்படுத்த வேண்டும்.
ஒருவர் உள்ளிழுக்கும் காற்றை எவ்வளவு விரைவாக வெளியேற்றுகிறார் என்பதை அடிப்படையாகக் கொண்டு மதிப்பிடும் 'ஸ்பைரோமெட்ரி' பரிசோதனையின் மூலம் பல்வேறு நுரையீரல் நோய்களைக் கண்டறிய முடியும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவிஷீல்டு தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அறிவிப்பு!

வேங்கைவயல் விவகாரம்: மேலும் 3 பேருக்கு இன்று குரல் மாதிரி சோதனை

சவுக்கு சங்கர் மீது சென்னை காவல்துறையும் வழக்கு!

வெப்ப அலை: தொழிலாளா்கள் பாதிக்காத வகையில் பணி நேரம்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT