செய்திகள்

நோயாளிகள், பிரசவத்துக்கு அவசர உதவி எண் '104': திட்டத்தை தொடங்கி வைத்தார் ஆட்சியர்

தினமணி

தமிழ்நாடு அரசு இலவச மருத்துவ உதவிக்கான தொலைபேசி எண் 104, 24 மணி நேர மருத்துவ உதவி மற்றும் ஆலோசனை குறித்த விழிப்புணர்வுத் துண்டுப் பிரசுர விநியோகத்தை காஞ்சிபுரத்தில் ஆட்சியர் பா.பொன்னையா திங்கள்கிழமை தொடங்கி வைத்தார்.
தமிழக அரசால் கடந்த 2013-ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட 24 மணி நேர 104' தொலைபேசி மருத்துவ சேவை மற்றும் தகவல் மையம் மக்களிடம் போதிய அளவு சென்று சேரவில்லை.
இதையொட்டி இச்சேவை குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் திங்கள்கிழமை காஞ்சிபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் துண்டுப் பிரசுர விநியோகம் நடைபெற்றது.
இதனை ஆட்சியர் பா.பொன்னையா தொடங்கி வைத்து பேசியது: 24 மணிநேர 104 தொலைபேசி மருத்துவ உதவி மற்றும் தகவல் மையம் அளிக்கும் சேவைகள் எம்பிபிஎஸ் பட்டம் பெற்ற மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் மூலமாக சுகாதாரம் சார்ந்த அறிவுரைகள் மற்றும் தகவல்கள் வழங்கப்படுகின்றன.
24 மணிநேர அவசர கால பணிகளில் குறிப்பாக ஆபத்தான நிலையிலுள்ள நோயாளிகளுக்கும், பிரசவ கால சிரமங்களை எதிர்கொள்ளும் கர்ப்பிணிகளுக்கும் உரிய தகவல் அளிக்கப்படும். மேலும் 108 அவசர கால ஆம்புலன்ஸ் இணைப்பும் ஏற்படுத்தி தரப்படுகிறது. சுகாதார சேவைகள் வழங்குவதில் குறைகள் இருந்தால் அவற்றை சரி செய்யவும், 24 மணி நேரமும் இது தொடர்பான குறைகளைத் தீர்க்கவும் உடனடி உதவி செய்யப்படுகிறது.
சுகாதார சேவையை மேம்படுத்துவதற்காக பொதுமக்களின் கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை பகிர்ந்து கொண்டு, தரமான சேவை பாதுகாப்பு, கருணை மிகுந்த நடவடிக்கைகளுக்கு ஊக்கமளிக்கப்படும். மேலும், சம்பந்தப்பட்ட துறைகள் மற்றும் நிறுவனங்களுக்கு சரியான தொடர் நடவடிக்கை எடுக்க வழிவகை செய்யப்படுகிறது.
ஊட்டச்சத்து, எச்ஐவி மற்றும் எய்ட்ஸ், குடும்ப நலம், தற்கொலை எண்ணம் போன்ற பிரச்னைகளுக்கு தகுந்த ஆலோசனைகளும் வழங்கப்படுகின்றன.
இதற்கான விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்தும் வகையில் விளம்பர துண்டுப் பிரசுரம் விநியோகிக்கப்பட்டுள்ளது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நீட் தோ்வு: ஈரோடு மாவட்டத்தில் 4,747 மாணவா்கள் எழுதுகின்றனா்

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மே 13-இல் தொடக்கம்

விறுவிறுப்படையும் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

SCROLL FOR NEXT