செய்திகள்

மழைக்கால தொற்றுநோய்களைத் தடுக்க 30 நடமாடும் மருத்துவக் குழுக்கள்: அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

தினமணி

மழைக்கால தொற்று நோய்கள் ஏற்படாமல் தடுக்க சுகாதாரத் துறை சார்பில் சென்னையில் 30 நடமாடும் சிறப்பு மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் தெரிவித்தார். 
சென்னையில் தொடர் மழை காரணமாக மழை நீரில் கழிவு நீர் கலந்து ஓடுகிறது. தெருக்களில் தேங்கியுள்ள மழைநீரில் இருந்து தொற்று நோய் பரவக்கூடும் என்பதால் முன்னெச்சரிக்கையாக தமிழக சுகாதாரத் துறை தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின் பேரில் மழைக்கால நோய்கள் ஏற்படாமல் தடுக்க சுகாதாரத்துறை அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்துள்ளது.
இந்நிலையில் தாம்பரம் அரசு மருத்துவமனையில் வெள்ளத் தடுப்புப் பணிகள் குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தபின் செய்தியாளர்களிடம் கூறியது:
சென்னையில் தொற்று நோயைத் தடுப்பதற்காக சுகாதாரத் துறை, சென்னை மாநகராட்சியின் மூலம் 30 நடமாடும் மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. 
ஒரு குழுவில் 2 மருத்துவர்கள், செவிலியர்கள், மருந்தாளுநர்களுடன் சுகாதார ஆய்வாளர்களும் உள்ளனர். இவர்கள் மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளுக்குச் சென்று தொற்று நோய் ஏற்படாத வகையில் பணியாற்றுவர்.
குடிநீர்த் தொட்டிகள், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளில் உள்ள குளோரினேஷன் செய்த குடிநீரைப் பயன்படுத்த பொதுமக்களுக்கு 250 முதல் 500 கிராம் வரை பிளீச்சிங் பவுடர் வழங்கப்படும். இது தண்ணீர் கிருமி நாசினியாக செயல்படும். மழைக்காலத்தில் ஏற்படும் வயிற்றுப் போக்கு, வாந்தி, காய்ச்சல் மற்றும் சேற்றுப்புண் ஆகியவற்றுக்கு மருந்துகள் வழங்கப்படும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

SCROLL FOR NEXT