செய்திகள்

பல் மற்றும் ஈறுகள் கூச்சமாக உள்ளதா?

உடலில் எண்ணெய்ப்பசை குறைவதால் ஈரப்பதம் குறையும். அது போல் சளி ஜவ்வு படலம் இருந்தால் தான்

கோவை பாலா

அறிகுறிகள் : உடலில் எண்ணெய்ப்பசை குறைவதால் ஈரப்பதம் குறையும். அது போல் சளி ஜவ்வு படலம் இருந்தால் தான் உடலில் சுமுகமான முறையில் பொருட்களின் பரிமாற்றம் நடைபெறும.இதனால் மூக்கில் உள்ள சளி காய்ந்த உலர்ந்த நிலை ஏற்படும். வாய் வறட்சியாக இருக்கும்.அடிக்கடி தண்ணீர் குடித்துக் கொண்டே இருப்பார்கள். நாக்கில் கொப்பளங்கள் மற்றும் பல் கூச்சம் குறைபாட்டிலிருந்து முற்றிலும் விடுபட..

மண்டலம்- நாளமுள்ளச் சுரப்பி மண்டலம்
காய்- வெண்டைக்காய்
பஞ்சபூதம் - காற்று
மாதம் - மாசி
குணம் - திருப்தி
ராசி /லக்கினம் -  கும்பம்

சத்துக்கள் : வைட்டமின்கள் (ஏ, பி, சி, ஈ மற்றும் கே), கனிமங்கள், கால்சியம், இரும்புச்சத்து, மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் ஜிங்க் வளமையாக உள்ளது. மேலும் சவ்வு போன்ற நார்ச்சத்தும் வெண்டைக்காயில் அதிகமாக உள்ளது. 

தீர்வு : வெண்டைக்காய் (5) எடுத்து 10 நிமிடம் வெதுவெதுப்பான நீரில் ஊறவைத்து பின்பு நறுக்கி அதனுடன் ஒரு எலுமிச்சம் பழத்தை தோலுடன் நறுக்கி அரைத்து சாறு எடுத்து அதனுடன் சேர்த்து மிளகுத் தூள் (1 ஸ்பூன்), சீரகத்தூள் (1 ஸ்பூன்), சிறிதளவு இந்துப்பு சேர்த்து கலக்கி 10 நிமிடம் ஊற வைத்து பின்பு கொஞ்சம் கொஞ்சமாக மென்று சாப்பிட்டு வரவும். மதியம் வேளை உணவில் வெண்டைக்காயை  நீராவியில் வேக வைத்து பொறியல் செய்து சாப்பிட்டு வரவும்.

வெற்றிலை (2), மிளகு(2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப்போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு : பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வரமிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala15@gmail.com 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மருதம் எல்லையம்மன் கோயில் தோ்த் திருவிழா

முனைவா் வசந்திதேவி மறைவுக்கு அஞ்சலி

தஞ்சையில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டம் தொடக்கம்

வாலாஜாபாத்தில் 195 ஆண்டுகள் பழைமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு

ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சுற்றுலா பேருந்து விபத்து: 6 போ் காயம்

SCROLL FOR NEXT