செய்திகள்

தொண்டை கரகரப்பு மற்றும் ஈரப்பதத்தினால் உண்டாகும் சளி மற்றும் மூச்சு திணறல் நீங்க

நமது உடல் முழுவதும் வேலை செய்யும் செல்களால் சுத்தப்படுத்தமுடியாத வேலையினையும் சிறுநீரகம் செய்யும்.

கோவை பாலா

அறிகுறிகள் : நமது உடல் முழுவதும் வேலை செய்யும் செல்களால் சுத்தப்படுத்த முடியாத வேலையினையும் சிறுநீரகம் செய்யும். சிறுநீரகத்தின் மூலம் சுத்தப்படுத்தப்பட்ட நீர் நிலைகள் உடம்பின் வளர்ச்சிக்கு தேவைப்படுகின்றது. இதில் விஷம் இருப்பின் அது உடலை சீரழிக்கும். இதனால் ஏற்படும் தொண்டை கமறல் மற்றும் ஈரப்பதத்தினால் உண்டாகும் சளி மற்றும் மூச்சு திணறலிலிருந்து விடுபட.

மண்டலம் - சிறுநீரக மண்டலம் 
காய் - கத்தரிக்காய் .
பஞ்சபூதம் - நிலம்
மாதம் - வைகாசி
குணம் - சகிப்புத்தன்மை
ராசி/லக்கினம் - ரிஷபம்

சத்துக்கள் : வைட்டமின்  B2, C, B6, தையமின், நியசின், மெக்னீசியம், பாஸ்பரஸ், காப்பர், பொட்டாசியம், மங்கனீசு, கால்சியம், இரும்புச் சத்து, போலிக் ஆசிட், நார்ச் சத்து 

தீர்வு : ஒரு இளம் பிஞ்சு கத்தரிக்காயை (வரியுள்ள நாட்டு காய்) எடுத்துக் கொண்டு ஒரு 15 நிமிடம் வெதுவெதுப்பான நீரில் ஊறப் போட்டு பின்பு எடுத்து நறுக்கி மிக்ஸியில் போட்டு அதனுடன் முருங்கை விதை (5), வெற்றிலை (2), புதினா (சிறிதளவு), எலுமிச்சம் பழம் தோலோடு (அரை), தக்காளி (1), மிளகு(2), கொஞ்சம் மஞ்சள் தூள், தேவையெனில் உப்பு சேர்த்து அனைத்தையும் நன்றாக அரைத்து ஜூஸாக்கி வடிகட்டி காலை மாலை என இருவேளையும் குடித்து வரவும்.

வெற்றிலை (2), மிளகு(2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப்போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு : பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வரமிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala15@gmail.com 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழகத்தில் ஆட்சிமாற்றம் வேண்டும் என நினைப்பவா்கள் ஓரணியில் திரள வேண்டும்: ஜி.கே. வாசன்

மின்னலொளி பெண்ணழகே... கிகி விஜய்!

ரூ.335 கோடி கடனை குறைத்து கொண்ட பிசி ஜுவல்லர்ஸ்!

என்றும் இயல்பாக... பார்வதி!

3-வது அதிவேக சதம் விளாசிய ஹாரி ப்ரூக்; வெற்றியை நோக்கி இங்கிலாந்து!

SCROLL FOR NEXT