செய்திகள்

உடல் பருமன் குறைய வேண்டுமா? இது ஒரு சிறந்த வழி!

இரும்புச் சத்து, கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் ஏ, பி, சி நிறைந்துள்ளது.

கோவை பாலா

காய் : கொத்தவரங்காய் + எலுமிச்சம் பழத்தோல்  + கோவக்காய்

சத்துக்கள் : இரும்புச் சத்து, கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் ஏ, பி, சி நிறைந்துள்ளது.

தீர்வு : காலை எழுந்தவுடன்  மற்றும் மாலையில் குடிக்கவும்.

கொத்தவரங்காய்யுடன் (5), கோவக்காய் (5), ஒரு அரை எலுமிச்சம்பழம் (தோலோடு), உப்பு (கொஞ்சம்), தக்காளி (1), புதினா (சிறிதளவு), வெற்றிலை (2) இவை அனைத்தையும் பொடியாக நறுக்கி மிக்ஸியில் போட்டு அதனுடன் சிறிது இஞ்சி (1 துண்டு), மிளகு (2) சேர்த்து அரைத்து ஜூஸாக்கி தினந்தோறும் காலை எழுந்தவுடன் மற்றும் மாலை வேளையில் வெறும் வயிற்றில் குடித்து வரவும்.

காலை  இரவு வேளை உணவாக

கேரட் துருவல். 50 கிராம் 
புடலங்காய் அரிந்தது. - 50 கிராம் கோவைக்காய் அரிந்தது - 50 கிராம் நறுக்கிய தக்காளி. - 2 
நறுக்கிய வெங்காயம். - 50 கிராம் தேங்காய் துருவல் - 50 கிராம்
சீரகத் தூள். - 5 கிராம்
மிளகுத் தூள். - 5 கிராம் 
எலுமிச்சைச் சாறு தோலோடு  - 50 மி.லி 
புளிக்காத கெட்டித் தயிர் - 100 கிராம்

மேற்கண்ட அனைத்தையும் ஒன்றாக கலந்து, சிறிது உப்பு சேர்த்து அதனுடன் நறுக்கிய கறிவைப்பில்லை, கொத்தமல்லி, புதினா ஆகியவற்றைச் சேர்த்துச் சாப்பிடவும். இதை காலை மற்றும் இரவு வேளை உணவாகச் சாப்பிட்டு வரவும். பின்பு பசித்தால் வழக்கமான உணவு எடுத்துக் கொள்ளலாம்.

வெற்றிலை (2), மிளகு (2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் இரவு படுக்கப் போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு : பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வரமிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala15@gmail.com

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தியாகியின் கொள்ளுப் பேரனுக்கு சோ்க்கை கோரி மனு: கேந்திரிய வித்யாலயா பள்ளிக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

மொபட்-காா் மோதல்: விவசாயி உயிரிழப்பு

ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ.4.35 கோடி

கம்போடியாவில் தவிக்கும் மகனை மீட்கக் கோரி தாய் வழக்கு: வெளியுறவுத் துறைக்கு உயா்நீதிமன்றம் கண்டனம்

அரசுப் போட்டித் தோ்வு கலந்தாய்வு: அருந்ததியருக்கு கூடுதல் வாய்ப்பு

SCROLL FOR NEXT