செய்திகள்

பெண்களுக்கு ஓர் எச்சரிக்கை! 35 வயதுக்கு மேல் குழந்தை பெற்றால், பிறக்கும் குழந்தைகளுக்கு இதய நோய்கள் தாக்கும் அபாயம்!

இந்த ஆய்வின் மூலமாக நடுத்தர வயதுக்கு மேற்பட்டு வயதான பெண்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு வரக்கூடிய ஆரோக்ய குறைபாடுகள் குறித்து மேலும் விளக்கமாக ஆராய முடிவதாக அவர் தெரிவித்துள்ளார்.

RKV

35 வயதுக்கு மேல் குழந்தை பெற்றுக் கொள்ள நினைக்கும் பெண்களுக்கொரு ஒரு எச்சரிக்கை. குழந்தை பெற்றுக் கொள்ளும் வயது ஏற, ஏற பெண்களின் உடல்நிலையில் ஏற்படும் ஹார்மோனல் மாற்றங்களுக்கு ஏற்ப அவர்களது குழந்தை பெறும் திறனும் பாதிப்புக்கு உள்ளாகிறது எனப் பல்லாண்டுகளாகவே மருத்துவ ஆய்வுக் கட்டுரைகள் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. 35 வயதுக்கு மேல் ஒரு குழந்தையை கருப்பையில் தாங்கி 10 மாதம் சுமந்து போஷாக்காக வளர்த்து பிரசவிக்கும் திறன் பெண்களுக்கு குறைந்து விடுகிறது. வயது ஏற, ஏற கருப்பை தனது ஆரோக்யத்தைப் படிப்படியாக இழந்து கொண்டே வருகிறது. இதன் காரணமாகவே மகப்பேறு மருத்துவர்கள் திருமணமான தம்பதிகளிடையே விரைவில் குழந்தை பெற்றுக் கொள்ளும் ஆவலை ஊக்குவிப்பதோடு, பணி மாறுதல், உயர் கல்வி, வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காக காத்திருத்தல், உள்ளிட்ட காரணங்களுக்காக எல்லாம் குழந்தப்பேற்றை தள்ளிப்போட நினைக்கும் மனப்பான்மையையும் தொடர்ந்து கண்டித்து வருகிறார்கள்.

உடலியல் காரணங்களினாலோ அல்லது பொருளியல் காரணங்களினாலோ ஒரு பெண்ணுக்கு குழந்தைப்பேறு தள்ளிப் போய் காலதாமதாக குழந்தைப்பேறு நிலைக்கிறது எனில் குழந்தையைக் கருவில் தாங்கும் தாயின் வயதைப் பொறுத்து கருவிலிருக்கும் குழந்தையின் உடல் வளர்ச்சி, மூளை வளர்ச்சி மற்றும் உள்ளுறுப்பு வளர்ச்சிகள், இதய ஆரோக்யம் உள்ளிட்டவை அமைகின்றன என்கிறது சமீபத்தில் வெளிவந்துள்ள கனடா மருத்துவப் பல்கலைக்கழக ஆய்வு ஒன்று. 

அந்த ஆய்வின் அடிப்படையில் வயதான எலிகளிடையே இந்த சோதனை நடத்தப்பட்டதில் மேற்கண்ட ஆய்வு முடிவு நிரூபணமாகியுள்ளது. 35 வயதுடைய பெண்ணுக்கு சமமான கருப்பை திறன் கொண்ட வயதான பெண் எலிகளிடையே நடத்தப் பட்ட அந்த மருத்துவ ஆய்வில் வயதாக, ஆக பெண்களின் கருப்பை ஆரோக்யம் நிறைந்த, உடற்கோளாறுகள் அற்ற குழந்தைகளைப் பெற்றுத்தரும் திறனை படிப்படியாக இழந்து வருவது நிரூபணமாகியுள்ளதாக இந்த ஆய்வை நடத்திய மருத்துவக் குழுவின் தலைமை ஆய்வாளரான சாண்ட்ரா டாவிட்ஜ் தெரிவித்துள்ளார். இந்த ஆய்வின் மூலமாக நடுத்தர வயதுக்கு மேற்பட்டு வயதான பெண்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு வரக்கூடிய ஆரோக்ய குறைபாடுகள் குறித்து மேலும் விளக்கமாக ஆராய முடிவதாக அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காஜல் அகர்வால் விபத்தில் சிக்கினாரா?

கோவையில் கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார்!

தேங்காய், எண்ணெய் பாட்டில்கள் திருட்டு.. மும்பை விமான நிலைய அதிகாரிகள் 15 பேர் பணிநீக்கம்!

குடியரசு துணைத் தலைவர் தோ்தல்! முதலில் வாக்களித்த பிரதமர் Modi

காஞ்சிபுரம் டிஎஸ்பி கைது: மேல்முறையீட்டு மனு இன்று பிற்பகல் விசாரணை!

SCROLL FOR NEXT