செய்திகள்

ஒரு நாளில் எத்தனை முறை பல் துலக்க வேண்டும்?

தினமணி

பொதுவாக ஒரு நாளைக்கு இருமுறை பல் துலக்குவது நல்லது. அதிலும் குறிப்பாக ஒரு நாளில் எத்தனை முறை பல் துலக்குவது என்பதைவிட, எப்படி முறையாக பல் துலக்குவது என்பது மிகவும் முக்கியமான ஓன்று.

முதலில் பல் துலக்குவதற்கு பிரஷ் தேர்வு செய்யும்போது, மிகக்கடினமாக இல்லாமல், சாஃப்டாக இருக்கும் பிரஷ்களை தேர்வு செய்வதே சிறந்தது.

மேலும் பல் துலக்கும்போது, நீளவாக்கில் தேய்க்காமல், மேலும், கீழுமாய் தேய்க்க வேண்டும். ஏனெனில் நீளவாக்கில் தேய்க்கும்போது, பற்களில் தேய்மானம் அதிகம் ஏற்பட்டு, விரைவில் பல் கூச்சம் வரும். பற்கள், ஈறுகள் மற்றும் நாக்கு என வாயின் அனைத்து பகுதிகளையும் கவனித்து சுத்தம் செய்வது முக்கியமானது.

குறிப்பாக 2 அல்லது 3 மாதங்களுக்கு ஒருமுறை பிரஷை மாற்ற வேண்டும். புளூரைடு உள்ள பேஸ்ட் கொண்டு பல் துலக்குவது நல்லது.

பற்களில் கூச்சம் இருந்தால் அதற்கான பிரத்யேகமான பேஸ்ட் பயன்படுத்த வேண்டும். சரியான பராமரிப்பின் மூலம் பற்சொத்தை வருவதை குறைக்கலாம்.

 - மு.சுகாரா

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேவந்த் ரெட்டி ஆஜராக தில்லி போலீஸ் சம்மன்!

வழிபாட்டு உரிமை மறுப்பு.. வேளார் சமூகத்தினர் புகார்!

பவர் பிளேவில் சிறப்பான பந்துவீச்சு; துஷார் தேஷ்பாண்டேவுக்கு ருதுராஜ் புகழாரம்!

இனியா, மிஸ்டர் மனைவி தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!

3 முக்கிய விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் - பாதுகாப்பு அதிகரிப்பு!

SCROLL FOR NEXT