செய்திகள்

தீராத தோள்பட்டை வலி நீங்க

கோவை பாலா

சத்துக்கள் : சோடியம், கார்போஹைட்ரேட் நார்ச்சத்து, சர்க்கரை, புரதம் வைட்டமின் (ஏ,  பி6  , சி ,  இ , கே )

தீர்வு : இளம் பிஞ்சு வாழைக்காய் (50 கிராம்) வாழைப்பூ (50 கிராம்), அரசாணிக்காய் (150 கிராம் தோலுடன் துருவியது), தேங்காய் (100 கிராம் துருவியது)  இவை அனைத்தையும் மிக்ஸியில் போட்டு அரைத்து ஜூஸாக்கி கொஞ்சம் கொஞ்சமாக குடித்து வரவும்.

மதிய வேளை உணவில் வாழைக்காய், வாழைப்பூ, அரசாணிக்காய் இவை மூன்றையும் போதுமான அளவு எடுத்து எடுத்து நீராவியில் வேக வைத்து பொரியல் செய்து அதனுடன் புதினா தழை மற்றும் தேங்காய் துருவல் சேர்த்து ஒருவேளை உணவில்  அதிகமாக வைத்து சாப்பிட்டு வரவும்.

வெற்றிலை (2), மிளகு (2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் இரவு படுக்கப் போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு : பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வரமிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala15@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பார்வை ஒன்று போதுமே... சாக்ஷி அகர்வால்!

கண் பேசும் வார்த்தை... அதிதி ஷங்கர்!

டி20 உலகக் கோப்பைக்கான ஜாகீர் கானின் இந்திய அணியை தெரிந்து கொள்ள வேண்டுமா?

மோடி ஆட்சியில் வேலைவாய்ப்பின்மை விகிதம் அதிகரிப்பு: பிரியங்கா காந்தி

நீலநிற மேகமே... சதா!

SCROLL FOR NEXT