செய்திகள்

செரிமானச் செயலிழப்பு மற்றும் ஆசனவாய் வெடிப்பு பிரச்னைகள் நீங்க இதுதான் சிறந்த வழி!

கோவை பாலா


 
சத்துக்கள் : புடலங்காயில் வைட்டமின்கள் ஏ,பி,சி ஆகியவை காணப்படுகின்றன. மெக்னீசியம், மாங்கனீஸ், கால்சியம், இரும்புச்சத்து, பொட்டாசியம், அயோடின் முதலியவை உள்ளன. மேலும் இக்காய் அதிக அளவு நார்ச்சத்து, புரதம், குறைந்த அளவு எரிசக்தி ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

தீர்வு    :  புடலங்காய் (100 கிராம்),  கோவக்காய் (5),  புதினா (சிறிதளவு),  வெற்றிலை (1), தக்காளி (1), இவை அனைத்தையும்  மிக்ஸியில் போட்டு  தண்ணீர் அல்லது மோர் ஊற்றி அரைத்து ஜூஸாக்கி, காலை இரவு வேளை உணவிற்கு முன் வெறும் வயிற்றில் குடித்த பின்பு பசி எடுத்தால் வழக்கமான உணவு எடுத்துக் கொள்ளலாம்.

முளைக் கீரையுடன் மிளகு, சீரகம், பூண்டு, சின்ன வெங்காயம், மஞ்சள் ஆகியவற்றைச் சேர்த்து  கொதிக்க வைத்து   மதியம் வேளை உணவில் நிறைய சாப்பிட்டு வந்தால் செரிமான செயலிழப்பு நீங்கும். உணவில் பொறியலாக காயை நீராவியில் வேக வைத்து பொறியல் செய்து நிறைய சாப்பிட்டு வரவும்.

வெற்றிலை (2), மிளகு(2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப் போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு : பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வரமிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala15@gmail.com 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யாா் பிரதமரானாலும், உலகின் 3-ஆவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும்: சிதம்பரம் பேட்டி

கர்நாடகத்தை சீரழித்தது காங்கிரஸ்: மோடி

இம்பாக்ட் பிளேயர் விதியால் ஒவ்வொரு நாளும் கடினமாகும் போட்டிகள்: ரிஷப் பந்த்

ட்ரெண்டிங் ஆடையில் குஷி கபூர் - புகைப்படங்கள்

இது காங்கிரஸுக்கான நேரம்... ஒடிசாவில் ராகுல் பேச்சு

SCROLL FOR NEXT