முகப்பு
செய்திகள்

இதயத்தில் உண்டாகும் அடைப்பினை நீக்கி இதயம் சீராக இயங்க இது உதவும்

எலுமிச்சை பழத்தின் தோலில் வைட்டமின் A, E, C, B6, ரிபோப்லாவின், பாஸ்பரஸ், இரும்புச் சத்து, கால்சியம், பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்ற சத்துக்கள் ஏராளமாக உள்ளது.

Updated On : 31 ஜனவரி, 2024 at 7:02 AM
பகிர்:


சத்துக்கள் : எலுமிச்சை பழத்தின் தோலில் வைட்டமின் A, E, C, B6, ரிபோப்லாவின், பாஸ்பரஸ், இரும்புச் சத்து, கால்சியம், பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்ற சத்துக்கள் ஏராளமாக உள்ளது.

தேவையானவை :
எலுமிச்சம் பழம் (10) 
கருஞ்சீரகம் (150 கிராம்)  
சீரகம் (100 கிராம்) 
பெருஞ்சீரகம் (100 கிராம்)  
காட்டுச் சீரகம் (50 கிராம்)  
பிளப்புச் சீரகம் (50 கிராம்)

செய்முறை : முதலில் சீரக வரிசை அனைத்தையும் ஒன்றாக கலந்து வைத்துக் கொள்ளவும். பின்பு எலுமிச்சம் பழத்தை தோலோடு நறுக்கி சாறு எடுத்து அதனுடன் சீரகம் அனைத்தையும் ஒன்றாக கலந்து வெயிலில் காய வைக்கவும். நன்கு காய்ந்த பிறகு அனைத்தையும் மிக்ஸியில் போட்டு தூள் செய்து வைத்துக் கொள்ளவும்.

இதனை தினமும் காலை மாலை என இருவேளையும் ஒரு ஸ்பூன் (5 கிராம்) அளவு எடுத்து சுடுநீரில் கலந்து குடித்து வந்தால் இதய வீக்கம், வாயு கோளாறுகள், கொழுப்புகளை கரைத்து இதயத்தில் உண்டாகும் அடைப்பினை நீங்கி இதயம் சீராக இயங்கும்.

தினமும் இரவு படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு (2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வரமிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala15@gmail.com

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.