செய்திகள்

சர்க்கரை நோய், தூக்கமின்மை மற்றும் மனம் சார்ந்த குறைபாடு உள்ளவர்களுக்கு மிகச் சிறந்த பானம் இது!

கோவை பாலா

கீரை : வல்லாரை காபி

தேவையான பொருட்கள்

வல்லாரைக் கீரை (நிழலில் உலர்த்தியது) - கால் கிலோ
மிளகு - 25 கிராம்
சுக்கு - 25 கிராம்
ஏலக்காய் - 10 கிராம்
தனியா - 100 கிராம்

செய்முறை : உலர வைத்த கீரையுடன் மேற்கூறிய பொருட்களையும் ஒன்றாகச் சேர்த்து பொடியாக்கிக் கொள்ளவும். இதனை தினமும் 2 ஸ்பூன் அளவு எடுத்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்றாகக் கொதிக்க வைத்து வடிகட்டி அதனுடன் பால் சேர்த்து குடித்து வந்தால், குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு மிகவும் ஏற்றது. மேலும் சர்க்கரை நோய், தூக்கமின்மை மற்றும் மனம் சார்ந்த குறைபாட்டால் பாதிக்கபட்டவர்களுக்கு மிகச் சிறந்த பானமாக பயன்படும்.

தினமும் இரவு படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு (2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வரமிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala15@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விபத்து நிகழ்ந்த கல் குவாரியிருந்து 2 டன் வெடி பொருள்கள் அகற்றம்

நோயைவிட வேகமாகப் பரவும் வதந்தி!

திருப்பூரில் நாளை புற்றுநோய் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி

திருவிழாவில் கோஷ்டி மோதல்: 10 பேருக்கு கத்திக்குத்து

ராமநாதபுரம் மாவட்ட சிறைகளில் நீதிபதி, ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT