செய்திகள்

தீராத நோய்களை எல்லாம் குணமாக்கும் அற்புதமான சூப் இதுதான்!

பசலைக் கீரையை சுத்தம் செய்து சிறிது சிறிதாக நறுக்கிக் கொள்ளவும்.

கோவை பாலா

கீரை : பசலைக்கீரை  சூப்

தேவையான பொருட்கள்

பசலைக் கீரை - ஒரு கட்டு
உளுந்து (வறுத்தது) - 1 ஸ்பூன்
தக்காளி - 2
வெங்காயம் - ஒன்று
பூண்டு.- 10 பல்
இஞ்சி - ஒரு துண்டு
கொத்தமல்லி - ஒரு கைப்பிடி
புதினா - ஒரு கைப்பிடி
மிளகு - அரை ஸ்பூன்
சீரகம்   - அரை ஸ்பூன்
உப்பு, மஞ்சள், எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை : பசலைக் கீரையை சுத்தம் செய்து சிறிது சிறிதாக நறுக்கிக் கொள்ளவும். பிறகு வாணலியில் எண்ணெய் விட்டு நறுக்கிய தக்காளி , வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

அடுத்து பூண்டு, இஞ்சி, கொத்தமல்லி, புதினா, மிளகு, சீரகம் , மஞ்சள், உளுந்து ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து அரைத்து தக்காளியுடன் சேர்த்து வதக்கவும்.

கடைசியாக கீரையையும் அதனுடன் சேர்த்து வதக்கி ஆறு டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க வைத்து பாதியாக சுண்டச் செய்து அதனுடன் தேவையான உப்பு சேர்த்து இறக்கி வைத்து குடிக்கவும்.

தினமும் இரவு படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு (2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வரமிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala15@gmail.com

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வலிகளைச் சிரிப்பில் காட்டிய அன்புள்ளம்... ஸ்ரீனிவாசனுக்கு மோகன்லால் இரங்கல்!

கொல்லப்பட்ட வங்கதேச மாணவர் இயக்கத் தலைவரின் உடல் நல்லடக்கம்! லட்சக்கணக்கான மக்கள் பிரியாவிடை!

புதுதில்லியில் அட‌ர்ந்த‌ ப‌னிமூட்டம் - புகைப்படங்கள்

இலங்கையில் தித்வா புயலால் சீர்குலைந்த பொருளாதாரம்: அவசரகால நிதியாக 20.6 கோடி டாலர் விடுவிப்பு - ஐஎம்எஃப்

டி20 உலகக் கோப்பைக்கான அணியில் ஷுப்மன் கில் சேர்க்கப்படாததன் காரணம் என்ன? அஜித் அகர்கர் விளக்கம்!

SCROLL FOR NEXT