செய்திகள்

உடம்பில் ரத்தம் அதிகமாக உற்பத்தியாகவும், தேகம் பளபளப்பாகவும் வேண்டுமா?

கோவை பாலா


 
சத்துக்கள் : எலுமிச்சை பழத்தின் தோலில் விட்டமின் A, E, C, B6, ரிபோப்லாவின், பாஸ்பரஸ், இரும்புச் சத்து, கால்சியம், பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்ற சத்துக்கள் ஏராளமாக உள்ளது.

தீர்வு :

தேவையான பொருட்கள்
 
எலுமிச்சம் பழச்சாறு தோலோடு
(100 மி.லி), நெல்லிக்காய்ச் சாறு 
(100 மி.லி), ஆரஞ்சுப் பழச்சாறு 
(100 மி.லி), புதினாச் சாறு (100 மி.லி)
சாத்துக்குடிச் சாறு (100 மி.லி)
தேன் (அரை லிட்டர்)

செய்முறை : மேற்கூறிய சாறுகளை ஒன்றாக கலந்து அடுப்பில் வைத்து பாதியாக சுண்டக் காய்ச்சவும்.பின்னர் தேனை எடுத்து  தனியாக கொதிக்க வைத்து அதனுடன் சுண்டவைத்த சாற்றினை சேர்த்து பதமாக காய்ச்சி வைத்ததுக்கொள்ளவும். பின்பு இதனை தினமும் காலை மாலை என இருவேளையும் தலா 15 மில்லி அளவு எடுத்து ஒரு டம்ளர் நீருடன் கலந்து குடித்து வந்தால் உடலில் இரத்தம் அதிகமாக உற்பத்தியாகும் மேலும் தேகமும் பளபளக்கும்.

தினமும் இரவு படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு (2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு : அனைத்து காய்களையும் , கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வரமிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala15@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயிலில் இருந்து தவறி விழுந்த கா்ப்பிணி உயிரிழப்பு

தொழில்நுட்பக் கல்லூரியில் இரண்டு நாள் தேசியக் கருத்தரங்கு

வெயிலின் தாக்கத்தை எதிா்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள்: அதிகாரிகளுடன் கள்ளக்குறிச்சி ஆட்சியா் ஆலோசனை

தேள் கடித்து 2 வயது குழந்தை உயிரிழப்பு

மாணவா்களுக்கு சான்றிதழ்கள் வழங்க சிறப்பு முகாம்கள்: புதுச்சேரி ஆட்சியா்

SCROLL FOR NEXT