செய்திகள்

உடல் எடையை வெகுவாக குறைக்க உதவும் துவையல்

கோவை பாலா

வெங்காயத்தாள் துவையல்

தேவையான பொருட்கள்

வெங்காயத் தாள் (நறுக்கியது) - 200 கிராம்
தேங்காய்த் துருவல் - 50 கிராம்
பெருஞ்சீரகம் - அரை ஸ்பூன்
சீரகம் - அரை ஸ்பூன்
மிளகு - 10 கிராம்
பூண்டு - 10 பல்
இஞ்சி - ஒரு துண்டு
பெருங்காயம் - கால் ஸ்பூன்
மஞ்சள் - கால் ஸ்பூன்
தக்காளி - 3
எலுமிச்சை பழம் - பாதியளவு

முதலில் வாணலியில் எண்ணெய் விட்டு அதில் வெங்காயத் தாளை போட்டு, எலுமிச்சம் பழத்தை பிழிந்து விட்டு நன்கு வதக்கிக் கொள்ளவும். பிறகு மிளகு, சீரகம், பெருஞ்சீரகம், பூண்டு, கொத்தமல்லி, புதினா, கறிவேப்பிலை, இஞ்சி ஆகியவற்றை சேர்த்து அரைத்து வதக்கி வைத்துள்ள வெங்காயத்தாளுடன் சேர்த்து மறுபடியும் வதக்கிக் கொள்ளவும். தக்காளியை நறுக்கி வதக்கி அதனுடன் உப்பு, மஞ்சள், பெருங்காயம் ஆகியவற்றைச் சேர்த்து எடுத்து லேசாக மசித்துக் கொள்ளவும். கடைசியில் வாணலியில் சிறிது கடுகு, பருப்பு போட்டுத் தாளித்து அதனுடன் வதக்கிய வெங்காயத் தாளையும், மசித்த தக்காளியையும் சேர்த்து ஒன்றாக கலக்கி லேசாக கொதிக்க வைத்து இறக்கிக் கொள்ளவும்.

பயன்கள் : இந்தத் துவையலை தினமும் உணவில் மூன்றுவேளையும் சேர்த்து வந்தால் உடல் எடை வெகுவாக குறைவதற்கு வெங்காயத்தாள் துவையல்  பயனளிக்கும்.

இரவு படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு(2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து  தினமும் படுக்கப் போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விழுப்புரம்: சிறைகளில் உள்கட்டமைப்பு வசதிகள் ஆய்வுக் கூட்டம் -ஆட்சியா், முதன்மை மாவட்ட நீதிபதி பங்கேற்பு

முதியவா் விஷம் குடித்துத் தற்கொலை

வீட்டுமனை ஆக்கிரமிப்பு: எஸ்.பி.யிடம் மூதாட்டி புகாா்

மணிலாவுக்கு குறைந்த விலை நிா்ணயம்: திண்டிவனத்தில் விவசாயிகள் சாலை மறியல்

ஓட்டுநா் உரிமம் நகலுக்கு கட்டாய வசூல்

SCROLL FOR NEXT