செய்திகள்

ரத்த சோகை மற்றும் நரம்புத் தளர்ச்சிக்குத் தீர்வு

முதலில் வெந்தயத்தை வறுத்துக் கொள்ளவும். பிறகு பெருங்காயத்தையும், மஞ்சள் துண்டையும் அடுத்தடுத்து பொரித்து எடுத்து மூன்றையும் பொடியாக்கிக் கொள்ளவும்.

கோவை பாலா

புளிச்சக் கீரை  துவையல்

தேவையான பொருட்கள்

புளிச்சக் கீரை - 200 கிராம்
மிளகு - 10 கிராம்
இஞ்சி - ஒரு துண்டு
வெந்தயம் - அரை ஸ்பூன்
பெருங்காயம் - சிறு துண்டு
மஞ்சள் - ஒரு துண்டு
கடுகு - அரை ஸ்பூன்
உப்பு, நல்லெண்ணெய் - தேவையான அளவு

செய்முறை : முதலில் வெந்தயத்தை வறுத்துக் கொள்ளவும். பிறகு பெருங்காயத்தையும், மஞ்சள் துண்டையும் அடுத்தடுத்து பொரித்து எடுத்து மூன்றையும் பொடியாக்கிக் கொள்ளவும். மிளகை தூளாக்கி மற்றும் இஞ்சியை அரைத்து பசையாக்கி கொள்ளவும். கீரையை நன்கு அலசி ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு எண்ணெய் விட்டு நன்கு வதக்கி பின்பு மசித்துக் கொள்ளவும். பிறகு வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து மேற்கூறிய மசித்து வைத்துள்ள கீரையையும், பொடியாக்கி வைத்துள்ளவற்றையும்,  இஞ்சி மற்றும் மிளகுத் தூளை சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்.

பயன்கள் : ரத்த சோகை  மற்றும்  நரம்புத் தளர்ச்சி  குறைபாடு உள்ளவர்கள் இந்த புளிச்சக் கீரை துவையலை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளக் கூடிய அற்புதமான உணவு 

இரவு படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு (2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப் போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆட்சியா் அலுவலகத்தில் கல்விக் கடன் முகாம்: 22 மாணவா்களுக்கு ரூ.2.32 கோடி கடன் உதவி

மயிலக்கா

உத்தமபாளையம் அருகே வாலிபருக்கு கத்திக்குத்து: ஒருவா் கைது

காரைக்குடி ரயில் நிலையத்தில் ரயில்வே கோட்ட மேலாளா் ஆய்வு

தூய செங்கோல் மாதா சப்பர பவனித் திருவிழா

SCROLL FOR NEXT