செய்திகள்

ஹலோ.. உங்கள் இதயம் நலமா? ஹார்ட் ஃபெயிலியர் பற்றிய சிறுகுறிப்பு!

தினமணி


இதயம் என்றாலே மாரடைப்பு மட்டும்தான் நோய் என்று நாம் நினைத்திருக்கிறோம். ஆனால், மாரடைப்பு எனப்படும் ஹார்ட் அட்டாக்கை விடவும் ஒரு சைலண்ட் கில்லர் நோய் இருக்கிறது அதுதான் ஹார்ட் ஃபெயிலியர்.

ஹார்ட் அட்டாக்கும், ஹார்ட் ஃபெயிலியரும் ஒன்றல்ல. இதனை முதலில் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

தற்போது மனிதர்களை ஹார்ட் ஃபெயிலியர் எனும்  கொடிய நோய் சத்தமே இல்லாமல் சாகடித்து வருகிறது.

ஹார்ட் ஃபெயிலியர் என்றால், நமது இதயம் மெல்ல மெல்ல அதன் இயக்கத்தை குறைப்பது. அதாவது உடலுக்குத்  தேவையான அளவுக்கு ரத்தத்தை அதனால் பம்ப் செய்ய முடியாமல், மெல்ல அதன் இயக்கம் குறைந்து வருவதும், ஒரு நாள் இதயம் தன் இயக்கத்தை முழுவதுமாக நிறுத்திவிடுவதும்தான் ஹார்ட் ஃபெயிலியர்.

இந்த ஹார்ட் ஃபெயிலியருக்கான அறிகுறிகள் என்னென்ன?

தரையில் நிமிர்ந்து படுக்கும் போது மூச்சு விடுவதில் சிரமம்.

கை, கால் மூட்டுகளில் வீக்கம்.

பெரும்பாலும் தளர்வாக உணர்வது, சிறிது நடந்தாலும் மூச்சு விட சிரமப்படுவது.

திடீரென எடை கூடுதல். 

அடிக்கடி சிறுநீர் கழித்தல்.

திடீரென இதயம் வேகமாக துடிப்பது

இதுபோன்ற ஒரு சில அறிகுறிகளோ அல்லது அனைத்து அறிகுறிகளோ ஒருவருக்கு ஏற்படலாம்.

இதில் துரதிருஷ்டம் என்னவென்றால், ஹார்ட் ஃபெயிலியர் நோய் கண்டுபிடிக்கப்பட்ட ஓராண்டுக்குள் நோயாளி மரணம் அடைவதுதான் வேதனையைத் தருகிறது.

எனவே நோயை முன்கூட்டியே கண்டறிந்து, அதற்கேற்ப உணவு மற்றும் வாழ்க்கை முறையை மாற்றியமைத்துக் கொண்டால் நிச்சயம் ஹார்ட் ஃபெயிலியரை வெல்லலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிமுக சாா்பில் நீா்மோா் பந்தல்

வாக்குப்பதிவு இயந்திர மையங்கள் அருகே ட்ரோன் பறக்கத் தடை கோரி திமுக மனு

அதிமுக தண்ணீா் பந்தல் திறப்பு

காா் மோதி பெண் உயிரிழப்பு

பிரதமா் மோடியை எதிா்த்து 111 விவசாயிகள் வேட்புமனு: அய்யாக்கண்ணு அறிவிப்பு

SCROLL FOR NEXT