செய்திகள்

தேவையற்ற கொழுப்பை கரைக்க உதவும் உன்னதமானக் கஞ்சி

கோவை பாலா

 
கறிவேப்பிலை புழுங்கலரிசிக் கஞ்சி
 
தேவையான பொருட்கள்

 
புழுங்கலரிசி நொய் - 100 கிராம்
கறிவேப்பிலை - இரண்டு கைப்பிடி
உப்பு - தேவையான அளவு
மோர் - தேவையான அளவு

செய்முறை

  • முதலில் ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க வைத்து அதில் கறிவேப்பிலையை போட்டு மூடவும்.
  • சில நிமிடங்கள் கழித்து மூடியைத் திறந்தால் கறிவேப்பிலையின் சாறு முழுவதும் இறங்கி தண்ணீர் பச்சை நிறமாக இருக்கும். அதனை வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.
  • வடிகட்டிய நீரை பாத்திரத்தில் ஊற்றி அதில் புழுங்கலரிசி நொய்யைச் சேர்த்து வேக வைக்கவும். அது நன்கு வெந்து கஞ்சி பதம் வந்தவுடன் இறக்கி வைக்கவும்.
  • பின்பு கஞ்சியில் சிறிதளவு உப்பு மற்றும் மோர் சேர்த்து பருகலாம்.
  • அல்லது எலுமிச்சம் பழச்சாறு கலந்தும் கஞ்சியை அருந்தலாம்.

பயன்கள்

இந்தக் கஞ்சியை அதிகப்படியான கொழுப்பு உள்ளவர்கள் தினமும் ஒருவேளை மருந்தாக இந்தக் கஞ்சியை குடித்து வந்தால் தேவையற்ற கொழுப்பு கரைந்து உடல் ஆரோக்கியம் மேம்பட உதவும்.

தினமும் இரவு படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு(2) , உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து  வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வரமிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala15@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காரல் மாா்க்ஸ் பிறந்தநாள் விழா

3 மணி நேர போராட்டம்: ஸ்வியாடெக் முதல் முறை சாம்பியன்

வித்யா குரு அலங்காரத்தில் முனீஸ்வரா்...

இன்று வெளியாகிறது பிளஸ் 2 தோ்வு முடிவுகள்

துளிகள்...

SCROLL FOR NEXT