இன்றைய மருத்துவ சிந்தனை (3.12.2016) கரிசலாங்கண்ணிக் கீரை
கரிசலாங்கண்ணிக் கீரையை மிளகு, சோம்பு சேர்த்து கஷாயம் வைத்துக் குடித்தால்
உணவிலும் மாற்றம்! உடலிலும் மாற்றம்!
கரிசலாங்கண்ணிக் கீரையை மிளகு, சோம்பு சேர்த்து கஷாயம் வைத்துக் குடித்தால் தலைவலி குணமாகும்.
கரிசலாங்கண்ணிக் கீரைச் சாறு எடுத்து, அதிகாலையில் 30 மில்லக அளவுக்கு 48 நாள்களுக்குத் தொடர்ந்து குடித்தால் பித்தப்பை கற்கள் கரையும்.
Advertisement
கரிசலாங்கண்ணிக் கீரைச் சாற்றில் (30 மில்லி) நல்லெண்ணெய் கலந்து வாய் கொப்பளித்தால் வாய்ப்புண் குணமாகும்.
கரிசலாங்கண்ணிக் கீரைச் சாற்றில் நெல்லிமுள்ளி , சீரகம் - இரண்டையூம் சம அளவு ஊறவைத்து உலர்த்திப் பொடியாக்கி , தினமும் காலை மாலை இருவேளையும் இரண்டு கிராம் அளவுக்குச் சாப்பிட்டால் இளநரை மறையும்.
கரிசலாங்கண்ணிக் கீரைச் சாறு (30 மில்லி), பருப்புக் கீரை (30 மில்லி) இரண்டையும் ஒன்றாகக் கலந்து தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் ஆரம்பநிலை புற்று நோய் குணமாகும்.
கரிசலாங்கண்ணிங் கீரைச் சாற்றில் திப்பிலியை ஊறவைத்து உலர்த்திப் பொடியாக்கி, தினமும் காலையில் இரண்டு கிராம் அளவுக்குச் சாப்பிட்டால் மூச்சிரைப்பு குணமாகும்.
கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர் மற்றும் Foot and Hand Reflexologist
Cell : 96557 58609
Covaibala15@gmail.com