உணவே மருந்து

நீங்கள் அதிகமாகக் காபி குடிப்பவரா?

IANS

உங்களுக்கு அடிக்கடி காபி குடிக்கும் பழக்கம் உள்ளதா? காபியும், செய்தித்தாளும், சங்கீதமும் ஒன்றுடன் ஒன்று இணையும் போது அது மனத்துக்கு சுகமளிக்கும் ஒன்றாகிவிடுகிறது. காலை எழுந்தவுடன் செய்தித்தாளுடன் ஒரு கப் காபி குடிப்பது அந்த நாளை உற்சாகத்துடன் தொடங்க பலருக்கு சக்தி கொடுக்கும். இன்னும் சிலருக்கு இசைக் கச்சேரிக்கு செல்லும் போதெல்லாம் காபி தேவைப்படும். சிலர் காபியையே உணவாக அடிக்கடி ஒரு மடக்கு குடித்து உயிர் வாழ்வார்கள். அவரவர் தேவை, அவரவர் ரசனை சார்ந்தது இது என்றாலும் உடல் நலம் என்பது எதைவிடவும் முக்கியமான ஒன்று.  காபி நல்லதா கெட்டதா என்று தெரிந்து கொள்ள இந்த ஆய்வைப் பற்றி நீங்கள் நிச்சயம் தெரிந்து கொள்ள வேண்டும்.

சமீபத்திய ஒரு ஆய்வில், காபியில் உள்ள காஃபின் காதுகளில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று கண்டுபிடித்துள்ளனர். அதுவும் ராக் போன்ற அதிக சத்தம் வரும் இசை கச்சேரிகளில் கலந்து கொள்ளும் காபி ரசிகர்களுக்கு பிரச்னை அதிகம் என்கிறது இந்த ஆய்வு. தேநீர், காபி மற்றும் சில குளிர்பானங்கள் மற்றும் எனர்ஜி பானங்களில் காஃபின் உள்ளது. காஃபின் குறுகிய நேரத்துக்கான விழிப்புணர்ச்சியைத் தரும் ஒரு ஊக்கிப் பொருளாகும். காபி அல்லது டீ குடிக்கும் போது சோர்வை நீக்குகிறது அல்லவா? ஆனால் அது தற்காலிகமானது. இரவில் தூங்குவதற்கு முன் அதை உட்கொள்வது சில மக்களில் தூக்கத்தை கெடுக்கக் கூடும். 

விமான நிலையம், தொழிற்சாலை, சுரங்கம் போன்ற அதிக இரைச்சல் உடைய இடங்களில் பணிபுரிபவர்களின் காதுகளிலும் காஃபின் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்துகிறதாம். இனி காபி பிரியர்கள் இசைக் கச்சேரிக்கு செல்லும் போது கவனமாக இருக்க வேண்டும் என்கிறது இந்த ஆராய்ச்சி. 

கனடாவில் உள்ள மெக்கில் பல்கலைக்கழகத்தின் ( McGill University Health Centre (RI-MUHC) ஆய்வின்படி, அதிகப்படியான காஃபின் நுகர்வு, காதுகளில் பிரச்னை உண்டாக்கி கேட்கும் திறனை பெரிதும் பாதிக்கக்கூடும் என்கிறது சின்ஹுவா (Xinhua) எனும் செய்தி நிறுவனம். 

டாக்டர் ஃபைசல் ஜாவாவி

காது உரத்த சத்தத்துக்கு உட்படும் போது, அது தற்காலிக செவித்திறன் பாதிப்பை ஏற்படுத்தலாம், மேலும் இது தற்காலிக பிரச்னை தான். ஆனால் இது 72 மணி நேரம் தொடர்ந்து பிரச்னை இருந்தால் நிரந்தரமாக காது சேதமடைந்துவிடும்’என்றார் மெக்கில்லைச் சேர்ந்த நிபுணர் டாக்டர் ஃபைசல் ஜாவாவி.

கினி பன்றிகளை வைத்து செய்த ஒரு பரிசோதனையின் மூலம் இத்தகைய தாக்கத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தார்கள். அவர்கள் பன்றிகளை குழுக்களாக்கி காப்பி குடிக்கச் செய்த பன்றிகளையும் குடிக்காத பன்றிகளையும் அதிகமான  110 dB சத்தமுள்ள சூழலில் அடைத்து அவற்றை சோதித்தனர். எட்டு நாட்கள் கழித்து, ஆராய்ச்சி குழுவினரின் கூற்றுப் படி, இரண்டு குழுக்களுக்கும் இடையே கேட்கும் இழப்பு கணிசமான வித்தியாசம் இருந்தது.

சாதாரண காஃபினை தினமும் 400 மில்லிகிராம்களுக்கு குறைவாக உட்கொண்டால் உடல் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்காது என 2015 ஆம் ஆண்டில், ஐரோப்பிய உணவு பாதுகாப்பு ஆணையம் கூறியுள்ளது. ஆனால் மெக்கில்லின் ஆய்வின்படி தினமும் 25 மில்லி காஃபின் நுகர்வே உடலுக்கு பிரச்னைகள் ஏற்படுத்தும், அதிலும் கேட்கும் திறனில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்று தெரிவிக்கிறது.

இந்த ஆய்வு முடிவு ஜர்னல் ஆஃப் தி அமெரிக்கன் மெடிக்கல் அசோஸியேஷனில் (Journal of the American Medical Association) வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிகரித்த தங்கம் விலை: இன்றைய நிலவரம்!

வணங்கான் வெளியீட்டு பணிகள் தீவிரம்!

தென்னிந்தியாவில் பாஜகவுக்கு வரவேற்பு; 100 தொகுதிகளில் வெல்லும்: அமித் ஷா

நத்தத்தில் திடீர் தீ விபத்து: ரூ. 40 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து நாசம்!

தேவகெளடா பேரன் மீது நடவடிக்கை தேவை: அமித் ஷா

SCROLL FOR NEXT