உணவே மருந்து

இன்றைய மருத்துவ சிந்தனை: கோதுமைப் புல்

தினமணி

உணவிலும் மாற்றம்!!!
உடலிலும் மாற்றம்!!!!


கோதுமைப் புல்:

  • பருக்கள் , வெடிப்புகள் , கரும் புள்ளிகள் மறைய கோதுமைப்புல்லை காய வைத்து பொடியாக்கி அதனுடன் சிறிது பால் சேர்த்து பசை போலாக்கி, சருமத்தின் மீது தடவி வந்தால்  பருக்கள், வெடிப்புகள், கரும்புள்ளிகள், சரும நிறம் மங்குதல் ஆகியவை மறையும்.
  • புற்று நோய் புதிய செல்களை அழிக்க கோதுமைப் புல் (50 கிராம்) எடுத்துக் கழுவி நன்கு அரைத்து அதனுடன் 150 மில்லி நீர் சேர்த்து கலந்து வடிகட்டியபின் அதில் தேன் கலந்து அந்த சாற்றைக் குடிக்கலாம். தயார் செய்தவுடன் குடித்து விட வேண்டும். இதனால் புற்று நோயை எதிர்க்கும் சக்தி இதற்கு உண்டு , இதிலுள்ள குளோரோபில் கதிரியக்கங்களின் தீமையைக் குறைக்கிறது. எனவே ஹீமோதெரபி மற்றும் ரேடியோதெரபி மருத்துவத்தை மேற்கொள்ளும் புற்றுநோயாளிகள், கோதுமைபுல் பவுடரை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
  • பல்வலி மறைய கோதுமைப்புல் சாறு எடுத்து பல் வலி உண்டாகும் போது வாயில் ஊற்றிக் கொப்பளித்து வந்தால்  பல் வலி குறையும்.
  • மூலம் நோய் குணமாக கோதுமை புல் பவுடரை ஒரு நாளைக்கு காலை மாலை என வேளை மூன்று மாதங்களுக்கு தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மூல நோயிலிருந்து முற்றிலும் விடுபடலாம்.
  • பொடுகு , தலைமுடி , நரைமுடி  பிரச்சனைகள்  தீர கோதுமைப்புல் பொடியைத் தலையில் தடவிக் கொண்டு குளித்து வந்தால், பொடுகு, வறட்சி மற்றும் உச்சந்தலை அரிப்பு போன்ற தலை சார்ந்த பிரச்சனைகள் தீரும்.
  • கோதுமைப் புல் பவுடர் தயாரிப்பது எப்படி கோதுமைப்புல் பொடி , வீட் கிராஸ் பவுடர் என்பது கோதுமைப்புல்லின் இலைகளை அரைத்து சாறெடுத்து, பின் அதை உலர வைத்து பொடி செய்யப்படும் ஒரு உணவுப்பொருளாகும். வயலில் இயற்கையாக வளர்ந்துள்ள மூன்று மாதம் நிரம்பிய கோதுமைப்புல்லின் இலைகளை சாறு எடுத்து, நீர்ப்பதம் போக நன்கு உலர வைத்து, அதிலிருந்து கோதுமைப்புல் பொடி தயாரிக்கப்படுகிறது.


KOVAI  HERBAL  CARE 
VEGETABLES CLINIC

கோவை பாலா ,
இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  Foot & Auricular Therapist
Cell  :  96557 58609
Covaibala15@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தலைமைச் செயலகம் படத்தின் டீசர்

தேர்தலில் வாக்களிக்காதது ஏன்?: ஜோதிகா விளக்கம்!

கண் அழைக்குது..!

ஐசிசி தரவரிசை வெளியீடு: டெஸ்ட்டில் இந்தியாவை பின்னுக்குத் தள்ளி ஆஸ்திரேலியா முதலிடம்!

புதிய 400சிசி இருசக்கர வாகனத்தை அறிமுகப்படுத்தியது பஜாஜ்!

SCROLL FOR NEXT