சிறு பருப்புடன் சிறிது வெல்லம் சேர்த்து நன்றாக வேக வைத்து சாப்பிட்டால் குடல்புண் (அல்சர்) குணமாகும்.
பச்சைப்பயிறுடன் வெல்லம் சேர்த்து அவித்துச் சாப்பிட்டு வந்தால் இளைத்த உடல் பெருக்கும்.
சுக்கு, தனியா, வெந்தயம், வெல்லம் தலா 10 கிராம் எடுத்து நன்றாக அரைத்து காலை , மாலை இருவேளையும் சாப்பிட்டு வந்தால் மூட்டு வலி , இடுப்பு வலி குணமாகும்.
சுண்ணாம்பு, சர்க்கரை, முருங்கைக் கீரை சாறு , தேன் - தலா இரண்டு கிராம் எடுத்துக் குழைத்து , தொண்டைப் பகுதியில் பற்றுப் போட்டால் , குரல் கம்முதல் , தொண்டைக்கட்டு போன்றவை உடனே குணமாகும்.
முழு நெல்லிக்காய் (4) பச்சை மிளகாய் (2) வெல்லம் (சிறிதளவு) மூன்றையும் ஒன்றாகச் சேர்த்து நன்றாக அரைத்துச் சாப்பிட்டால் பித்தம் தணியும், ஜீரணக் கோளாறுகள் குணமாகும.
கோவை பாலா ,
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர் மற்றும் Foot and Hand Reflexologist
Cell : 96557 58609
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.