உணவே மருந்து

இன்றைய மருத்துவ சிந்தனை (21.1.2017) தண்டுக் கீரை

தினமணி

தண்டுக் கீரையுடன் உளுந்து, மஞ்சள் இரண்டையும் சேர்த்துக் கஷாயமாகச் செய்து சாப்பிட்டு வந்தால் நரம்புக் கோளாறுகள் சரியாகும்.

தண்டுக் கீரையுடன் மிளகையும், மஞ்சளையும் சேர்த்துக் கஷாயமாகச் செய்து சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள கொழுப்பு கரையும்.

தண்டுக் கீரையுடன் சிறுபருப்பு, பூண்டு இரண்டையும் சேர்த்துச் சமைத்து சாப்பிட்டு வந்தால் உடல் எரிச்சல் தீரும்.

தண்டுக் கீரையுடன் நெல்லிச் சாறு சேர்த்து அரைத்து சாறு எடுத்து, சாற்றுக்கு சமமாக தேன் கலந்து காய்ச்சி இறக்கி தினமும் இரண்டு ஸ்பூன் சாப்பிட்டு வந்தால் கண் சம்பந்தப்பட்ட நோய்கள் அனைத்தும் குணமாகும்.

தண்டுக் கீரையுடன், சீரகம், மஞ்சள் மற்றும் பார்லியைச் சேர்த்து கஷாயமாகச் செய்து சாப்பிட்டு வந்தால் சீதபேதி குணமாகும். நீர் எரிச்சல், நீர் கடுப்பு மறையும். சிறுநீர் தாராளமாகப் பிரியும்.

தண்டுக் கீரை, துத்தி இலை,சீரகம் மூன்றையும் சேர்த்து கஷாயமாகச் செய்து சாப்பிட்டு வந்தால் மூல சூடு உள்ளிட்ட மூலம் தொடர்பான அனைத்துப்  பிரச்சனைகளும் குணமாகும்.

கோவை ஹெர்பல் கேர்

கோவை பாலா 

இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  Foot and Hand Reflexologist

Cell  :  96557 58609

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பதியில் 24 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம்!

ஹரியானாவில் பேருந்து தீப்பிடித்ததில் 8 பேர் பலி, 20-க்கும் மேற்பட்டோர் காயம்

கோட் படத்தின் விஎஃப்எக்ஸ் காட்சிகள் நிறைவு!

கனமழை எச்சரிக்கை: குற்றாலம் அருவிகளில் குளிக்க 5 நாள்கள் தடை

அம்பாசமுத்திரத்தை அச்சுறுத்திய சிறுத்தை சிக்கியது!

SCROLL FOR NEXT