உணவே மருந்து

இன்றைய மருத்துவ சிந்தனை இஞ்சி

தினமணி

இஞ்சியை, கொத்தமல்லி  (தனியா) வுடன் சேர்த்து துவையல் செய்து சாப்பிட்டு வந்தால் வயிற்றில் உண்டாகும் இரைச்சல் குணமாகும்.

இஞ்சிச் சாற்றில் தேன் கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் நரம்புத் தளர்ச்சி குணமாகும்.

இஞ்சித் துண்டுடன் தனியா சேர்த்து அரைத்து அதனுடன் தேன் மற்றும் எலுமிச்சம் பழம் சாறு கலந்து வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் புளித்த ஏப்பம்  மறையும். நன்றாக பசியும் எடுக்கும்.

இஞ்சி சாறு (1 ஸ்பூன்), எலுமிச்சம் பழச்சாறு (1ஸ்பூன்), தேன் (2 ஸ்பூன்) மூன்றையும் கலந்து குடித்து வந்தால் சளித்தொல்லை நீங்கும்.

இஞ்சியுடன், தேன், லவங்கைப்பட்டை, துளசி மூன்றையும் சேர்த்துக் கொதிக்கவைத்துக் குடித்து வந்தால் தொண்டைக்கரகரப்பு நீங்கும்.

புதினாவுடன் இஞ்சி சேர்த்து துவையல் செய்து சாப்பிட்டு வந்தால் பித்தம், அஜீரணக் கோளாறு நீங்கும்.

இஞ்சிச் சாற்றில் வெங்காயத்தை அரைத்து நெற்றியில் பற்றுப் போட்டால் தலைவலி குணமாகும்.

இஞ்சிச் சாற்றில் பெருங்காயப் பொடியைக் குழைத்து வயிற்றின் மீது தடவினால் வயிற்று உப்புசம் குணமாகும்.

KOVAI HERBAL CARE
கோவை பாலா,
இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  
Foot and Hand Reflexologist
Cell : 96557 58609

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

SCROLL FOR NEXT