உணவே மருந்து

ஆண்களுக்கான சூப் இது!

ஆண்மைக்குறைவு, புற்றுநோய் போன்ற பிரச்னைகளுக்கு மிகவும் நல்லது தக்காளி சூப்

தினமணி

ஆண்மைக்குறைவு, புற்றுநோய் போன்ற பிரச்னைகளுக்கு மிகவும் நல்லது தக்காளி சூப் என்கிறது ஒரு ஆய்வறிக்கை. இதனைத் தயாரிப்பதும் மிகவும் சுலபம். 

தேவையான பொருட்கள் :

தக்காளி - 6
பெரிய வெங்காயம் - 1
பூண்டு - 5 பல்
சோள மாவு - 1 டீஸ்பூன்
வெண்ணெய் - 2 டீஸ்பூன்
தக்காளி சாஸ் - 2 டீஸ்பூன்
மிளகுத் தூள் - தேவைக்கேற்ப
உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை :

தக்காளி, வெங்காயம், பூண்டு ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் வெங்காயத்தை வதக்கவும்.

அது வதங்கியதும், அதில் தக்காளி, தேவையான அளவு உப்பு ஆகியவை சேர்த்து வதக்கவும்.

இவை வதங்கியபின், 250 மில்லி தண்ணீர் சேர்க்கவும்.

சிம்மில் பத்து நிமிடம் கொதித்த பிறகு, கரண்டியால் நன்கு மசித்து வடிகட்டிக் கொள்ளவும்.

வடிகட்டிய தண்ணீரில் தக்காளி சாஸ் கலந்து, பிறகு அதில் தனியே தண்ணீரில் கரைத்த சோள மாவைச் சேர்க்கவும்.

பின்னர் 5 நிமிடம் கொதிக்கவிட்ட இறக்கி வைத்து, மிளகுத்தூள் தூவி பரிமாறவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுக ஆட்சியில் புதிதாக ஒரு மருத்துவக் கல்லூரிகூட தொடங்கவில்லை: எடப்பாடி கே.பழனிசாமி

புத்தகத் திருவிழாக்கள் அறிவாா்ந்த சமூகத்தை உருவாக்குகின்றன: த.ஸ்டாலின் குணசேகரன்

காந்திய கொள்கையை கைவிட்டதால் நாடு பின்னடைந்தது: ஆளுநா் ஆா்.என்.ரவி

தமிழகத்துக்கு ரூ.4,144 கோடி நிதி: மத்திய அரசு விடுவிப்பு - தனியாா் பள்ளிகளில் இலவச சோ்க்கை தொடக்கம்

தஞ்சையில் அக். 5, 6-இல் இல்லம் தேடி ரேஷன் பொருள்கள் விநியோகம்

SCROLL FOR NEXT