உணவே மருந்து

இன்றைய மருத்துவ சிந்தனை: முசுமுசுக்கைக் கீரை

தினமணி


உணவிலும் மாற்றம்!!!
உடலிலும் மாற்றம்!!!!


முசுமுசுக்கைக் கீரை:

  • முசுமுசுக்கைக் கீரைச் சாற்றில் சீரகத்தை ஊறவைத்து உலர்த்திப் பொடியாக்கி ,தினமும் காலை மாலை என இருவேளையும் இரண்டு கிராம் அளவுக்குச் சாப்பிட்டு வந்தால் ரத்த அழுத்தம் சீராகும்.
  • முசுமுசுக்கைசக் கீரைச் சாற்றில் பறங்கிப்பட்டையை ஊற வைத்து உலர்த்தி, பாலில் வேகவைத்து மீண்டும் உலர்த்திப் பொடிசெய்து கொள்ளவும். இதில் தினமும் காலை மாலை என இருவேளையும் ஒரு கிராம் அளவுக்குச் சாப்பிட்டு வந்தால் தோல் நோய்கள் அனைத்தும் விலகும்.
  • முசுமுசுக்கைக் கீரைச் சாற்றில், உலர்ந்த திராட்சயை அரைத்துச் சாப்பிட்டால் வாந்தி நிற்கும்.
  • முசுமுசுக்கீரை (5 இலை), மிளகு(5) இரண்டையும் சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் சளி , கபம் குணமாகும்.
  • முசுமுசுக்கைக் கீரைச் சாறு எடுத்து அதில் திப்பிலியை ஊறவைத்து உலர்த்திப் பொடியாக்கி, மூன்று சிட்டிகை அளவுப் பொடியை தேனில் குழைத்து வெற்றிலையில் வைத்துச் சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமா குணமாகும்.
  • முசுமுசுக்கைக் கீரை , வெங்காயம் இரண்டையும் நெய் சேர்த்து வதக்கி பகல் உணவோடு சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமா, மூச்சுத்திணறல் போன்றவை குணமாகும்.


KOVAI  HERBAL CARE
கோவை பாலா ,
இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  Foot and Hand Reflexologist
Cell  :  96557 58609
Covaibala15@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெருங்களூரில் பிடாரியம்மன் கோயில் தோ்த் திருவிழா

அரசுப் பள்ளிகளுக்கு சீருடைகள் தைக்கும் பணி வழங்கக் கோரி மனு

பாரதியாா் பல்கலை.யில் எம்.எஸ்சி. செயற்கை நுண்ணறிவு படிப்புக்கு மாணவா் சோ்க்கை

அரவக்குறிச்சி பகுதிகளில் குழாய்கள் உடைந்து குடிநீா் வீணாவதாகப் புகாா்

மத்தியப் பல்கலைக்கழகத்தில் நுழைவுத் தோ்வு இல்லா படிப்புகள்

SCROLL FOR NEXT