முகப்பு
உணவே மருந்து

இன்றைய மருத்துவ சிந்தனை (8.01.2017)  முடக்கத்தான் கீரை

முடக்கத்தான் கீரைச் சாற்றில் கறுப்பு எள்ளை அரைத்துச் சாப்பிட்டு வந்தால் தடைபட்ட 

Updated On : 7 ஜனவரி 2017, 12:42 pm IST
பகிர்:

முடக்கத்தான் கீரைச் சாற்றில் கறுப்பு எள்ளை அரைத்துச் சாப்பிட்டு வந்தால் தடைபட்ட  மற்றும் தாமதித்த மாதவிலக்கு குணமாகும்.

முடக்கத்தான் கீரையுடன் கடுக்காயைத்  தட்டிப்போட்டு கஷாயம் வைத்துக் குடித்து வந்தால் மூல நோய்கள் குணமாகும்.

முடக்கத்தான் கீரைச் சாற்றில் மஞ்சள் தூள் (சிறிதளவு)  கலந்து சொரி, படை , சிரங்குகள் மீது பூசினால் குணம் பெறலாம்.

Advertisement

முடக்கத்தான் கீரை, வாதநாராயணன் கீரை இரண்டையும் சம அளவு எடுத்து அவற்றோடு பூண்டு(2பல்),மஞ்சள் தூள்(2 சிட்டிகை) ஆகியவற்றைச் சேர்த்து அரைத்து அதிகாலையில் சாப்பிட்டு வந்தால் அனைத்துவிதமான மூட்டு வலிகளும் குணமாகும்.

முடக்கத்தான் கீரையுடன் சிறிது வாய்விளங்கத்தைச் சேர்த்து அரைத்து , இரவு 
உணவுக்குப் பிறகு நெல்லிக்காய் அளவுக்குச் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் குணமாகும்.

முடக்கத்தான் கீரையில் சாறு எடுத்து லேசாகச் சூடுபடுத்தி காதில் சில துளிகளை விட்டால் காது வலி குணமாகும்.

கோவை பாலா ,

இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  Foot and Hand Reflexologist

Cell  :  96557 58609

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.