உணவே மருந்து

காது சரியாக கேட்கவில்லையா? இதோ இயற்கை வழி தீர்வு!

நமது எண்ணங்கள் அதிக அளவிற்கு பாதிப்பாகும் போதும் , அவசரப்படும் பொழுதும் உண்டாகும்

கோவை பாலா

அறிகுறிகள் : நமது எண்ணங்கள் அதிக அளவிற்கு பாதிப்பாகும் போதும், அவசரப்படும் பொழுதும் உண்டாகும் நாளமில்லாச் சுரப்பி மண்டலத்தின் சமச்சீரற்ற நிலையினால் காது பலவீனமடையும் பொழுது காதில் உண்டாகும் வலி மற்றும் காது கேட்கும் திறன் செயலிழப்பிலிருந்து விடுபட

மண்டலம் - நாளமில்லாச் சுரப்பி மண்டலம்
காய் - எலுமிச்சம் பழம்
பஞ்சபூதம் - நிலம்
மாதம் - தை
குணம் - பொறுமை
ராசி /லக்கினம் - மகரம் 

சத்துக்கள் : எலுமிச்சை பழத்தின் தோலில் வைட்டமின் A, E, C, B6, ரிபோப்லாவின், பாஸ்பரஸ், இரும்புச் சத்து, கால்சியம், பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்ற சத்துக்கள் ஏராளமாக உள்ளது.

தீர்வு : எலுமிச்சம் பழம் தோலுடன் (1) , புடலங்காய் (150 கிராம்), புதினா (சிறிதளவு), வெற்றிலை (4), இஞ்சி (1 துண்டு), தக்காளி (1), மஞ்சள் தூள் இவை அனைத்தையும் சேர்த்து மிக்ஸியில் போட்டு தண்ணீர் ஊற்றி  நன்றாக அரைத்து ஜூஸாக்கி காலை மாலை என இருவேளையும் குடித்து வந்தால் காதில் உண்டாகும் வலி மற்றும் காது கேட்கும் திறன் செயலிழப்பிலிருந்து விடுபட முடியும். தேவைப்பட்டால் உப்பு சேர்த்துக் கொள்ளவும்.

வெற்றிலை (2), மிளகு(2) , உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து  தினமும் படுக்கப்போகும் முன்  வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு : பச்சை மிளகாய்க்கு மாற்றாக  இஞ்சியையும் வரமிளகாய்க்கு மாற்றாக  மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர்
96557 58609 / Covaibala15@gmail.com  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

துலா ராசிக்கு சுபநிகழ்ச்சி: தினப்பலன்கள்

மக்களை முதன்மையாகக் கொண்ட குடியரசு இந்தியா!

ராசிபுரத்தில் மாணவா்கள் பங்கேற்ற மாரத்தான்

கேரம் விளையாட்டுப் போட்டி!

நீலகிரி மாவட்டத்தைச் சோ்ந்த மறைந்த பழங்குடியின ஓவியருக்கு பத்மஸ்ரீ விருது

SCROLL FOR NEXT