உணவே மருந்து

நமநம என்று காதுகளில் உண்டாகும் அரிப்பு நீங்க ஒரு எளிய மருத்துவம்!

கோவை பாலா

அறிகுறிகள் : நம் உடலில் அரிப்பு உண்டானால் கிருமிகளின் தாக்கம் உள்ளது என்று பொருள். கிருமிகள் இல்லாமல் ஒருவருக்கு உடம்பில் அரிப்பு வராது.உடலில் சேரும் நுண்ணுயிர்கள் மூலமாகத் தான் உடலில் ஏற்படும்.அந்த நுண்ணுயிர்கள் காதில் காணப்பட்டால் உண்டாகும்  அரிப்பு நிரந்தரமாக குணமாக..

மண்டலம் - சுவாச மண்டலம்
காய் - முருங்கை
பஞ்சபூதம் - காற்று
மாதம் - ஐப்பசி
குணம் - பணிவு
ராசி /லக்கினம் - துலாம்

சத்துக்கள் : நார்ச் சத்து, புரதச் சத்து, சுண்ணாம்புச் சத்து, இரும்புச் சத்து மற்றும் வைட்டமின்களும் மிக அதிக அளவில் உள்ளன.

தீர்வு : முற்றின முருங்கை விதை(4), கோவக்காய் (5) இவை இரண்டையும் மிக்ஸியில் போட்டு அதனுடன் புதினா, வெற்றிலை (1) சேர்த்து தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்து ஜூஸாக்கி  காலை மாலை என இருவேளையும் வெறும் வயிற்றில் குடித்து வரவும்.

தினந்தோறும் ஒரு வேளை உணவில் முருங்கைக் கீரையை  ஒன்றிரண்டாக ஆய்ந்து நன்றாக கழுவி நீராவியில் வேக வைத்து பின்பு வானலியில் போட்டு மிளகு , சீரகம்  சேர்த்து பொறியலாக செய்து   அளவு அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்ளலாம். (முருங்கைக்காயையும் எடுத்துக் கொள்ளலாம்). 

வெற்றிலை (2), மிளகு(2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப்போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு : பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வரமிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala15@gmail.com  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிகரிக்கும் ‘ஹீட் ஸ்ட்ரோக்’ பாதிப்புகள்: மருத்துவமனைகளில் சிறப்பு வாா்டு - ஓஆா்எஸ் கரைசல்

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல் பிரசாரம் நிறைவு -குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் நாளை வாக்குப்பதிவு

வெள்ளை மாளிகை பாதுகாப்பு தடுப்பில் மோதிய காா்: ஓட்டுநா் உயிரிழப்பு

கோடையில் நீா்ச்சத்து இழப்பை தவிா்க்க மோா், கூழ், இளநீா் பருகுவது அவசியம்: சித்த மருத்துவா் சோ.தில்லைவாணன்

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: விசாரணையை புறக்கணிக்க ஊழியா்களுக்கு உத்தரவு

SCROLL FOR NEXT