உணவிலும் மாற்றம்!!!
உடலிலும் மாற்றம்!!!!
- ஆசனவாய் அரிப்பு நீங்க சுண்டைக்காயை உலர்த்தி பொடியாக்கி சூரணம் செய்து வைத்துக் கொண்டு தினமும் ஐந்து கிராம் அளவு எடுத்து நீரில் கரைத்து சாப்பிட்டு வந்தால் ஆசனவாய் அரிப்பு நீங்கும். மலக்கிருமிகள் மற்றும் மூலக்கிருமிகள் அகலும்.
- தைராய்டு கோளாறுகள் நீங்க சுண்டைக்காய் வற்றல் , சீரகம் , சோம்பு இவை மூன்றையும் சம அளவு எடுத்து அரைத்து தினமும் காலை , மாலை இரு வேளையும் இரண்டு கிராம் அளவுக்குச் சாப்பிட்டு வந்தால் தைராய்டு கோளாறுகள் குணமாகும்.
- நீரிழிவு நோய் கட்டுப்பாட்டில் வைக்க சுண்டைக்காய் வற்றல் , மாதுளை ஒடு இவை இரண்டையும் சேர்த்து அரைத்து , தினமும் இரண்டு கிராம் அளவுக்குச் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் கட்டுப்படும்.
- உடல் பருமன் குறைய சுண்டைக்காய் வற்றலை பொடி செய்து வைத்துக் கொண்டு தினமும் ஐந்து கிராம் பொடியை எடுத்து காலை வேளையில் சாப்பிட்டு வந்தால் உடல் பருமன் குறையும்.
- ரத்தசோகை குணமாக சுண்டைக்காயை அடிக்கடி சமையலில் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் ரத்த சோகை குணமாகும்.
- குடல் பூச்சிகள் வெளியேற சுண்டைக்காய் வற்றல் , ஒமம் இவை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து வைத்துக் கொண்டு தினமும் காலையில் இரண்டு கிராம் அளவுக்குச் சாப்பிட்டு வந்தால் குடல் பூச்சிகள் ஒழியும்.
KOVAI HERBAL CARE
VEGETABLES CLINIC
கோவை பாலா ,
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர் மற்றும் Foot & Auricular Therapist
Cell : 96557 58609
Covaibala15@gmail.com