உணவிலும் மாற்றம்!!!
உடலிலும் மாற்றம்!!!!
- தூக்கமின்மை பிரச்சனை தீர கசகசாவை (10 கிராம்) அளவு எடுத்து மாதுளம் பழச்சாற்றில் ஊறவைத்து இரவு படுக்கபோகும் முன் சாப்பிட்டு வந்தால் தூக்கமின்மை பிரச்சனை தீரும்.
- உடல் வலுப்பெற கசகசா , முந்திரிப் பருப்பு , பாதாம் பருப்பு இவை அனைத்தையும் தலா 100 கிராம் அளவு எடுத்து அரைத்துக்கொள்ளவும். இதில் ஒரு ஸ்பூன் பொடியை காலை மாலை என இருவேளையும் பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் வலுப்பெறும்.
- முகம் அழகு பெற , முகப் பரு மறைய கசகசா , முந்திரிப்பருப்பு இவை இரண்டையும் சம அளவு எடுத்து பால் சேர்த்து அரைத்து முகத்தில் தடவி வந்தால் முகப்பரு மறையும். முகம் அழகு பெறும்.
- மூட்டு வலி நீங்க கசகசா , துத்தி இலை இவை இரண்டையும் சேர்த்து விழுதாக அரைத்து கால் மூட்டுகளில் பற்றுப்போட்டால் , மூட்டுவலி உடனே குணமாகும்.
- ரத்த உற்பத்தி அதிகரிக்க கசகசா , வாழைப்பூ , மிளகு, மஞ்சள் இவை அனைத்தையும் சிறிதளவு எடுத்து அனைத்தையும் சேர்த்துக் கஷாயம் வைத்துக் குடித்து வந்தால் ரத்த உற்பத்தி அதிகரிக்கும்.
- இடுப்பு வலி நீங்க கசகசா , ஜவ்வரிசி , பார்லி இவை மூன்றையும் தலா 10 கிராம் அளவு எடுத்து , பச்சரிசியுடன் (100 கிராம்) அளவு சேர்த்துக் கஞ்சி காய்ச்சிக் குடித்துவந்தால் இடுப்பு வலி குணமாகும்.
- வயிற்றுப் புண் குணமாக கசகசாவை தேங்காய்ப் பாலில் ஊறவைத்துச் சாப்பிட்டு வந்தால் , வயிற்றுப்புண் குணமாகும்.
KOVAI HERBAL CARE
VEGETABLES CLINIC
கோவை பாலா ,
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர் மற்றும் Foot & Auricular Therapist
Cell : 96557 58609
Covaibala15@gmail.com