உணவே மருந்து

காலையில் எழுந்தவுடன் உடல் தள்ளாட்டம், குமட்டல் மற்றும் தலைச்சுற்றல் ஏற்படுகிறதா?

நமது எண்ணங்கள் அதிக அளவிற்கு பாதிப்பாகும் போதும், அவசரப்படும் பொழுதும்

கோவை பாலா

அறிகுறிகள் : நமது எண்ணங்கள் அதிக அளவிற்கு பாதிப்பாகும் போதும், அவசரப்படும் பொழுதும் உண்டாகும் நாளமில்லாச் சுரப்பி மண்டலத்தின் சமச்சீரற்ற நிலையினால் நரம்பு மண்டலம் பாதிப்படைந்து காலையில் எழுந்தவுடன் உண்டாகும் தள்ளாட்டம், குமட்டல் மற்றும் தலைச்சுற்றல் ஆகியவற்றிலிருந்து முற்றிலும் நீங்க

மண்டலம் - நாளமில்லாச் சுரப்பி மண்டலம்

காய் - எலுமிச்சம் பழம்

பஞ்சபூதம் - நிலம்

மாதம் - தை

குணம் - பொறுமை

ராசி /லக்கினம் -  மகரம் 

சத்துக்கள் : எலுமிச்சை பழத்தின் தோலில் விட்டமின் A, E, C, B6, ரிபோப்ளோவின், பாஸ்பரஸ், இரும்புச் சத்து, கால்சியம், பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்ற சத்துக்கள் ஏராளமாக உள்ளது.

தீர்வு : எலுமிச்சம் பழத் தோலுடன் (1), கொத்தவரங்காய் (4), புதினா (சிறிதளவு), வெற்றிலை (4) , இஞ்சி (1 துண்டு)  இவை அனைத்தையும் சேர்த்து மிக்ஸியில் போட்டு தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்து ஜூஸாக்கி காலை மாலை என இருவேளையும் குடித்து வந்தால் காலையில் எழுந்தவுடன் உண்டாகும் தள்ளாட்டம், குமட்டல் மற்றும் தலைச்சுற்றல் குணமாகும். தேவைப்பட்டால் உப்பு சேர்த்துக்கொள்ளவும்

வெற்றிலை (2), மிளகு(2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப் போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு : பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வரமிளகாய்க்கு மாற்றாக  மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் 
96557 58609 / Covaibala15@gmail.com  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காயல்பட்டினத்தில் கந்தூரி விழா

அரிவாளை வைத்து மிரட்டும் வகையில் ரீல்ஸ் வெளியிட்டவர் கைது!

கோவில்பட்டி பள்ளியில் இருபெரும் விழா

திருச்சி ராமஜெயம் கொலை வழக்கு: பாளை சிறை கைதியிடம் டிஐஜி விசாரணை

குவஹாட்டியில் ஏழுமலையான் கோயில்: அஸ்ஸாம் முதல்வா் திருமலையில் ஆலோசனை

SCROLL FOR NEXT