உணவே மருந்து

தூரப் பார்வை மற்றும் வயதானவர்களுக்கு ஏற்படும் சாளேஸ்வரம் நீங்குவதற்கான வழி!

கோவை பாலா

அறிகுறிகள் : நம் உடலில் உள்ள அதிகமான புளிப்புத் தன்மையினால் கண்களில் உள்ள தசைகள் பாதிப்படைந்து தூரப்பார்வை மற்றும் வயதானவர்களுக்கு ஏற்படும் சாளேஸ்வரம் எனும் குறைபாட்டிலிருந்து அறுவை சிகிச்சையின்றி மற்றும் கண்ணாடி அணிவதிலிருந்து  விடுபட..

மண்டலம் - ஜீரண மண்டலம்
காய் - வெண் பூசணிக்காய்
பஞ்சபூதம் - நிலம்
மாதம் - சித்திரை
குணம் - தைரியம்
ராசி / லக்கினம்  -  மேஷம்

சத்துக்கள் : வைட்டமின் B, C, கால்சியம், பொட்டாசியம், இரும்புச் சத்து, பாஸ்பரஸ் மற்றும் நார்ச்சத்து

தீர்வு : வெண்பூசணிக்காய் (100 கிராம்), வெற்றிலை (5), புதினா, கொத்தமல்லி, கருவேப்பிலை மூன்றையும் சிறிதளவு எடுத்து அனைத்தையும் மிக்ஸியில் போட்டு தண்ணீர் ஊற்றி ஜூஸாக்கி காலை மாலை என இருவேளையும் வெறும் வயிற்றில் குடித்து வரவும். 

முருங்கை விதையிலிருந்து எடுக்கப்பட்ட முருங்கை எண்ணெய்யை தினமும் இரவு படுக்கப் போகும் முன் இரண்டு கண்களிலும் தலா ஒரு சொட்டு வீதம் போட்டு வந்தால் தூரப் பார்வை மற்றும் வயதானவர்களுக்கு உண்டாகும் சாளேஸ்வரம்  குறைபாட்டிலிருந்து  முற்றிலும் விடுபடலாம்.

வெற்றிலை (2), மிளகு(2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப் போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு : பச்சை மிளகாய்க்கு மாற்றாக  இஞ்சியையும், வரமிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா 
இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் 
96557 58609 / Covaibala15@gmail.com                  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கூகுளில் அதிகம் தேடப்படும் சுற்றுலா தலங்கள்! உங்களின் தேர்வு இவற்றில் எது?

ஆனந்ததாண்டவபுரம் பஞ்சவடீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

அரசு நிா்வாகம் மூலம் பருத்தி கொள்முதல் செய்ய வலியுறுத்தல்

காரைக்கால் மாங்கனித் திருவிழா பந்தல்கால் முகூா்த்தம்

போதை ஒழிப்பு விழிப்புணா்வு பிரசாரம்

SCROLL FOR NEXT