உணவே மருந்து

கண்களில் உண்டாகும் ஒளிக் கூச்சம் (PHOTO PHOBIA) குணமாக

கண்களின் உட்புறமும் நீர் உள்ளது .அதில் உப்புத்தன்மை ஏற ஏற ஒளி ஊடுரவும் தன்மை குறைந்து விடும்.

கோவை பாலா

கண்களின் உட்புறமும் நீர் உள்ளது .அதில் உப்புத்தன்மை ஏற ஏற ஒளி ஊடுருவும் தன்மை குறைந்து விடும். சூரிய ஒளி கண்களில் படும் போது ஒளிக்கூச்சம் உண்டாகும்.ஒளியை அவர்களால் பார்க்க முடியாது. அதற்கு காரணம் நம் கண்களில் உள்ள நீர்நிலைகளின் தன்மை மாறியிருக்கிறது. இதனை சரிசெய்ய சிறுநீரகங்களின் செயல்பாடுகள் சரியான முறையில் இருக்க வேண்டும்.

மண்டலம் - சிறுநீரக மண்டலம் 

காய் - கத்தரிக்காய்

பஞ்சபூதம் - நிலம்

மாதம் - வைகாசி

குணம் - சகிப்புத்தன்மை

ராசி/லக்கினம்  -  ரிஷபம் 

சத்துக்கள் : வைட்டமின்  B2, C, B6, தையமின், நியசின், மெக்னீசியம், பாஸ்பரஸ், காப்பர், பொட்டாசியம், மங்கனீசு, கால்சியம், இரும்புச் சத்து, போலிக் ஆசிட், நார்ச் சத்து 

தீர்வு : ஒரு கத்தரிக்காயை (வரியுள்ள நாட்டு காய்) எடுத்துக் கொண்டு 15 நிமிடம் சுடு நீரில் ஊறப் போட்டு பின்பு எடுத்து நறுக்கி மிக்ஸியில் போட்டு அதனுடன் எலுமிச்சம் பழம் தோலோடு (1), ஒரு தக்காளி, மிளகு(4), கொஞ்சம் மஞ்சள் தூள், தேவையெனில் உப்பு சேர்த்து அனைத்தையும் நன்றாக அரைத்து வடிகட்டி காலை மாலை என இருவேளையும் குடித்து வரவும்.

முருங்கை விதையிலிருந்து எடுக்கப்பட்ட முருங்கை எண்ணெய்யை தினமும் இரவு படுக்கப்போகும் முன் இரண்டு கண்களிலும் தலா ஒரு சொட்டு வீதம்  போட்டு வந்தால்  கண்களில் உண்டாகும் ஒளிக்கூச்சம் நீங்கும்.

வெற்றிலை (2), மிளகு (2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து  தினமும் படுக்கப் போகும் முன்  வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு - பச்சை மிளகாய்க்கு மாற்றாக  இஞ்சியையும் வரமிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர்
96557 58609 / Covaibala15@gmail.com

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, புறநகரில் கனமழை நீடிக்கும்!

அனல் மின்ஊழியா்களுக்கு மாதம் இரு சனிக்கிழமைகள் விடுமுறை: மின்வாரியம் உத்தரவு!

சிம்ம ராசிக்கு லாபம்: தினப்பலன்கள்!

சமயபுரம் கோயிலில் புதைவட மின் கம்பிகள் அமைக்கும் பணி தொடக்கம்

முசிறி அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளிக்கு ரூ. 1. 20 லட்சம் மதிப்பில் பொருட்கள் வழங்கல்

SCROLL FOR NEXT