உணவே மருந்து

சுவையான அத்திப்பழ அல்வாவில் இத்தனை சத்துக்களா?

பாத்திமா பீ

தேவையானவை:
பேரீச்சம் பழம் - 100 கிராம்
உலர்ந்த அத்திப் பழம் - 2
நெய் - 150 கிராம்
சர்க்கரை - கால் கிலோ
எண்ணெய் - 50 மி.லி
முந்திரி - 25 கிராம்
திராட்சை 25 கிராம்
வெள்ளரி விதை - 2 தேக்கரண்டி
பழ ரக எசன்ஸ் - சிறிதளவு

செய்முறை: பேரீட்சை மற்றும் அத்திப் பழங்களைச் சேர்த்து முதல் நாள் இரவு மூழ்கும் அளவில் நீர் சேர்த்து காலை வரை ஊற வைக்கவும். பின்னர், அந்த நீருடன் நைசாக அரைக்கவும், வாணலியில் நெய், எண்ணெய்யை ஒன்றாக சேர்க்கவும். பின் சர்க்கரை, அரைத்த பேரீட்சை விழுது சேர்த்து நன்றாக கிளரவும். கிளறும் போது நெய், எண்ணெய் கலவை ஒன்றாக சேரும் அளவு நன்றாக கிளரவும் ஒட்டாமல் வரும்போது முந்திரி, திராட்சை, வெள்ளரி விதை மற்றும் சிறிதளவு பழ ரக எசன்ஸ் சேர்த்து கிளறி இறக்கவும். சுவையான பேரீச்சை அத்தி பழ அல்வா தயார். 

குறிப்பு: பேரீச்சை அல்வா செய்யும் போது கருப்பு பேரீச்சையாக இருக்க வேண்டும். பொள்ளாச்சி பகுதிகளில் பேரீட்சை அல்வா பிரபலம். இதில் அதிகளவு இரும்பு சத்து இருப்பதால், ரம்ஜான் நோன்பு காலங்களில் உடல் சோர்வை நீக்குகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மிக்ஜம், வெள்ளம்: தமிழகத்துக்கு ரூ. 276 கோடி புதிய பணிகளை தொடங்க கட்டுப்பாடு

அதிகரிக்கும் வெயில் தாக்கம்: இளநீா் விலை ரூ.90-ஆக உயா்வு

பொருளாதார வளா்ச்சிக்கு நவீன தொழில் நுட்பங்கள் அவசியம்: ரிசா்வ் வங்கி முன்னாள் ஆளுநா் சி. ரங்கராஜன்

அரசுப் பேருந்துகளில் சோதனை நிறைவு

ஆசிரியா்களுக்கு 30 நாள்களில் ஓய்வூதிய பலன்: கல்வித் துறை உத்தரவு

SCROLL FOR NEXT