முந்திரிப் பழத்தில் புரோட்டீன், பீட்டா - கரோட்டீன், டானின் என்ற ஆண்டி-ஆக்ஸிடண்ட், நார்ச்சத்துக்கள் போன்றவை வளமாக நிறைந்துள்ளது.
ஆரஞ்சு பழத்தை விட 5 மடங்கு அதிகமான சத்துக்கள் ஒரு முந்திரிப் பழத்தில் உள்ளது. நீரிழிவு மற்றும் இரத்த அழுத்தத்தினால் கஷ்டப்படுபவர்கள், முந்திரிப் பழத்தை சாப்பிட்டு வந்தால், அதனை குணமாக்கலாம்.
முந்திரிப் பழத்தைச் சாப்பிட்டால், வைட்டமின் சி குறைவினால் ஏற்படும் ஸ்கர்வி என்ற நோயின் தாக்கத்தில் இருந்து விடுபடலாம்.
முந்திரிப் பருப்பில் நார்ச்சத்து, வைட்டமின்கள், கனிம தாதுக்கள் உள்ளதோடு, நோய்கள் மற்றும் புற்றுநோயினை வராமல் தடுக்க உதவும். இதில் இதயத்திற்கு நன்மை தரக்கூடிய ஒற்றை நிறைவு பெறாத கொழுப்பு அமிலங்களான ஒலியிக் மற்றும் பால்மிட்டோயிக் அமிலங்கள் அதிக அளவில் காணப்படுகிறது.
முந்திரிப் பழமானது, நமது உடம்பின் நோயெதிர்ப்பு சக்தியை உருவாக்கி, ஈறுகளில் ரத்தக் கசிவுகள், பற்களின் பிரச்னைகள் மற்றும் நகங்கள் ஆகியவற்றின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.