உணவே மருந்து

இன்றைய மருத்துவ சிந்தனை: தூதுவளை

தினமணி

உணவிலும் மாற்றம்!!!
உடலிலும் மாற்றம்!!!!

இளைத்த உடல் பெருக்க தூதுவளைக் கீரையின் மேல் இருக்கும் முள்ளை நீக்கி நன்றாக அரைத்து பச்சரிசியுடன் (அரை கிலோ) கலந்து காயவைத்து அரைத்து அடை செய்து சாப்பிட்டுவந்தால் இளைத்த உடல் பெருக்கும்.

தொடர் தும்மல் உடனே நிற்க தூதுவளைக் கீரை (சிறிதளவு) , மிளகு (5) சேர்த்து நன்றாக அரைத்து தண்ணீரில் (2 லிட்டர்) போட்டுக் கொதிக்கவைத்து , பிறகு அதில் பால் மற்றும் சர்க்கரை சேர்த்து குடித்து வந்தால் தும்மல் உடனே குணமாகும்.

அதிகப்படியான கொழுப்பு கரைய தூதுவளைக் கீரைச் சாற்றை அரைத்து (30 மில்லி) அளவு  எடுத்து தினமும் காலையில் வெறும் வயிற்றில்  குடித்து வந்தால் அதிகப்படியான கொழுப்பு கரையும்.

இரத்தம் தூய்மையாக தூதுவளைக் கீரை , வேப்பந்தளிர் இவை இரண்டையும் சம அளவு எடுத்து கஷாயமாக்கி அதிகாலையில் வெறும் வயிற்றில்  குடித்துவந்தால் ரத்தம் தூய்மையாகும்.

காது சார்ந்த பிரச்சனை தீர தூதுவளைக் கீரையைக் காயவைத்துப் பொடியாக்கி  வைத்துக் கொண்டு தினமும் காலை மாலை என இரு வேளையும் தலா இரண்டு வீதம் சுடுநீரில் கலந்து  சாப்பிட்டு வந்தால் காது தொடர்பான நோய்கள் குணமாகும்.

மூக்கடைப்பு நீங்க தூதுவளைக் கீரையுடன் சீரகம் , பூண்டு , மிளகு , மஞ்சள் ஆகியவற்றைச் சேர்த்து கொதிக்கவைத்து ,  வடிகட்டி அந்தச் சாற்றை குடித்து வந்தால்  மூக்கடைப்பு குணமாகும்.

KOVAI  HERBAL  CARE VEGETABLES CLINIC

கோவை பாலா,
இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  Foot & Auricular Therapist

Cell  :  96557 58609
Covaibala15@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரலாற்று நிகழ்வு: திருப்பைஞ்ஞீலியில் அப்பர் கட்டமுது விழா

2 நாள் பயணமாக மேற்கு வங்கம் செல்கிறார் பிரதமர் மோடி!

இஸ்ரேல் உறவு துண்டிப்பு: நெதன்யாகு மீது கொலம்பிய அதிபர் காட்டம்!

தொலையாத கனவுகள்.. லாபதா லேடீஸ் - திரை விமர்சனம்!

400 பெண்களைச் சீரழித்த பிரஜ்வலுக்கு வாக்குக் கேட்டதற்காக மோடி மன்னிப்புக் கேட்க வேண்டும்: ராகுல் காந்தி

SCROLL FOR NEXT