உணவே மருந்து

உடல் எடை எளிதாக குறைய வேண்டுமா?

ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு அதில் வெங்காயத் தாளை போட்டு, எலுமிச்சம் பழத்தை பிழிந்து விட்டு நன்கு வதக்கிக் கொள்ளவும்.

கோவை பாலா

ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு அதில் வெங்காயத் தாளை போட்டு, எலுமிச்சம் பழத்தை பிழிந்து விட்டு நன்கு வதக்கிக் கொள்ளவும். பிறகு மிளகு, சீரகம், பெருஞ்சீரகம், பூண்டு, கொத்தமல்லி, புதினா, கறிவேப்பிலை, இஞ்சி ஆகியவற்றை சேர்த்து அரைத்து வதக்கி வைத்துள்ள வெங்காயத்தாளுடன் சேர்த்து மறுபடியும் வதக்கிக் கொள்ளவும். தக்காளியை நறுக்கி வதக்கி அதனுடன் உப்பு, மஞ்சள், பெருங்காயம் ஆகியவற்றைச் சேர்த்து எடுத்து லேசாக மசித்துக் கொள்ளவும். கடைசியில் வாணலியில் சிறிது கடுகு, பருப்பு போட்டுத் தாளித்து அதனுடன் வதக்கிய வெங்காயத் தாளையும், மசித்த தக்காளியையும் சேர்த்து ஒன்றாக கலக்கி லேசாக கொதிக்க வைத்து இறக்கிக் கொள்ளவும்.

இந்தத் துவையலை தினமும் உணவில் மூன்றுவேளையும் சேர்த்து வந்தால் உடல் எடை வெகுவாக குறைவதற்கு வெங்காயத்தாள் துவையல்  பயனளிக்கும்.

இரவு படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு(2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து  தினமும் படுக்கப் போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சுதந்திர நாள்: சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்!

திகட்டாத தேன்... சரண்யா ராமச்சந்திரன்!

தெரு நாய்களை அப்புறப்படுத்த இடைக்காலத் தடை இல்லை: தீர்ப்பு ஒத்திவைப்பு!

குழந்தைகளைக் கொல்வதை நிறுத்துங்கள்..! யுஇஎஃப்ஏ கண்டனம்!

ஏலகிரி மலைமக்களுடன் எடப்பாடி பழனிசாமி பேச்சு!

SCROLL FOR NEXT