முக வறட்சி நீங்கி தோலுக்கு பளபளப்பை கொடுக்கும் உணவு!
முதலில் காலா நமக் அரிசியை இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும்.
கோவக்காய் காலா நமக் அரிசிக் கஞ்சி
தேவையான பொருட்கள்
கோவக்காய் - 10
கேரட் - 5
காலா நமக் அரிசி. - 100 கிராம்
தேங்காய் துருவல். - 100 கிராம்
Advertisement
செய்முறை
- முதலில் காலா நமக் அரிசியை இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும்.
- கோவக்காய் மற்றும் கேரட்டை நறுக்கி நீராவியில் வைத்து வேக வைத்துக் கொள்ளவும்.
- வேக வைத்த காயை மிக்ஸியில் போட்டு அரைத்து விழுதாக்கி வைத்துக் கொள்ளவும்.
- பின்பு ஒரு பாத்திரத்தில் ஊற வைத்துள்ள காலா நமக் அரிசியை போட்டு 600 மி.லி அளவு தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.
- நன்கு வெந்து கஞ்சி பதம் வந்தவுடன் அதில் அரைத்து வைத்துள்ள விழுதைச் சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் இறக்கி வைத்துக் கொள்ளவும்.
- பின்பு அதில் துருவி வைத்துள்ள தேங்காயைச் சேர்த்து கலந்து குடிக்கவும்.
பயன்கள்
- இந்தக் கஞ்சியில் அதிகமான தாது உப்புகள் நிறைந்துள்ளது.
- இதனை முகவறட்சி மற்றும் உடல் வறட்சி உள்ளவர்கள் ஒரு வேளை உணவாக உட்கொண்டு வந்தால் வறட்சி அனைத்தும் நீங்கி மேனிக்கு பளபளப்பை கொடுக்கும்
படுக்கப் போகும் முன்
வெற்றிலை (2), மிளகு(2) , உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப்போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.
குறிப்பு
அனைத்து காய்களையும் , கீரைகளையும் நீராவியில் வேகவைத்து உணவாக சாப்பிட்டு வரவும்.
பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.
கோவை பாலா,
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர் மற்றும் காய்கறி சிகிச்சையாளர்.
Cell : 96557 58609, 73737 10080
Covaibala15@gmail.com