உணவே மருந்து

வாயு சார்ந்த குறைபாடு மற்றும் மலச்சிக்கலைப் போக்கும் ஆரோக்கிய சூப்

கோவை பாலா

புதினா சூப்

தேவையான பொருட்கள்

புதினா - ஒரு கைப்பிடி
கொத்தமல்லித் தழை - ஒரு கைப்பிடி
தக்காளி - 2
வெங்காயம் -  2
மிளகுத் தூள் -  ஒரு ஸ்பூன்
வெண்ணெய் - 50  கிராம்
பால் - அரை டம்ளர்
சீரகம்  -  சிறிதளவு
சோம்பு - சிறிதளவு
சிறுதானிய மாவு - மூன்று ஸ்பூன்

செய்முறை

  • முதலில் புதினா, கொத்தமல்லித் தழை இரண்டையும் சுத்தம் செய்து ஆய்ந்து வைத்துக் கொள்ளவும்.
  • வெங்காயம், தக்காளி இரண்டையும் நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு பாத்திரத்தில்  நான்கு டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க விடவும்.
  • கொதித்தப் பிறகு அதில் நறுக்கிய வெங்காயம் மற்றும் தக்காளியைப் போட்டு அதனை மூடிவைக்கவும்.
  • பத்து நிமிடத்திற்குப் பிறகு அதில் சீரகம், மிளகுத்தூள், சோம்பு, கொத்தமல்லித் தழை, புதினா ஆகியவற்றையும்  சேர்த்து சிறு தீயில் நன்கு கொதிக்கவிட்டு மூடி வைக்கவும்.
  • ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் வெண்ணெய்யை போட்டு உருக்கி அதில் சிறுதானிய மாவைக் கலந்து  சற்று வதக்கி அதில் ஒரு தம்ளர் தண்ணீர்  கலந்து இறக்கி விடவும்.
  • மறுபடியும் பாத்திரத்தை அடுப்பில் வைத்து பால் சேர்த்து மெல்லிய தீயில் கொதிக்க விடவும்.
  • பின்பு இதனுடன் ஏற்கனவே கொதிக்க வைத்து இறக்கியதை வடிகட்டி சேர்த்து கலக்கி இறக்கி வைத்துக் கொள்ளவும்.
  • தேவைக்கு உப்பு சேர்த்துக் கொள்ளவும்.

பலன்கள்

  • இந்த புதினா சூப் ருசியின்மை, வாந்தி மற்றும் உஷ்ணம் சார்ந்த குறைபாடுகளை போக்கும் ஆற்றல் உள்ள சூப்.
  • மேலும் வாயுப் பிரச்சனை மற்றும் தீராத மலச்சிக்கல் குறைபாடு உள்ளவர்களுக்கு அருமருந்தாக செயல்படும் சூப்.

இரவு படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு(2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து  தினமும் படுக்கப்போகும் முன்  வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு

அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேகவைத்து  உணவாக சாப்பிட்டு வரவும்.

பச்சை மிளகாய்க்கு மாற்றாக  இஞ்சியையும், வரமிளகாய்க்கு மாற்றாக  மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா  
இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  காய்கறி சிகிச்சையாளர்.
Cell : 96557 58609, 73737 10080
Covaibala15@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மோசமான வானிலை காரணமாக 40 விமானங்கள் ரத்து!

நீட் தேர்வு தொடங்கியது!

சடலமாக மீட்கப்பட்ட மூவர்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவல்துறை அதிகாரி டிராக்டர் ஏற்றிக் கொலை

காங்கிரஸ் நிர்வாகி புகாரளிக்கவில்லை- காவல்துறை மறுப்பு

SCROLL FOR NEXT