உணவே மருந்து

உடல் எடைக் குறைக்க அற்புதமான ஆரோக்கிய பச்சடி

இரவு படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு (2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து

கோவை பாலா

கொத்தமல்லித் தழை பச்சடி

தேவையான பொருட்கள்

கொத்தமல்லித் தழை -  ஒரு கட்டு
தயிர் - ஒரு கப்
இஞ்சி - ஒரு துண்டு
தக்காளி - 4
கடுகு - ஒரு ஸ்பூன்
எண்ணெய் - ஒரு ஸ்பூன்
வெள்ளை எள் - 2 ஸ்பூன்
மிளகுத் தூள் - ஒரு ஸ்பூன்
உருளைக் கிழங்கு - 2
சின்ன வெங்காயம் - 50  கிராம்
பெருங்காயம், உப்பு - தேவையான அளவு

செய்முறை

  • முதலில் கொத்தமல்லித் தழையை அலசி, ஆய்ந்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • உருளைக்கிழங்கைச் சீவி , தக்காளியோடு  சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.
  • எள்ளை லேசாக வறுத்துக் கொள்ளவும்
  • சின்ன வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி அதனுடன் மிளகுத் தூள், இஞ்சி, உப்பு, பெருங்காயம் மற்றும் தயிர் ஆகியவற்றையும் சேர்த்து நன்கு கடைந்து கொள்ளவும்.
  • அரைத்து வைத்துள்ள உருளைக் கிழங்கு தக்காளி விழுதை லேசாக எண்ணெய் விட்டு வதக்கி தயிர் கலவையுடன் சேர்க்கவும். பின்பு நறுக்கிய கொத்தமல்லித் தழைகளைச் சேர்த்து  நன்கு கலக்கி   கொள்ளவும்.
  • இறுதியில் வறுத்த எள்ளை பச்சடியில் தூவிப் பரிமாறவும்.

பயன்கள் : இந்தப் பச்சடி பல நோய்களை குணப்படுத்தும். மேலும் உடல் பருமன் ஆவதை தடுக்க விரும்புவர்கள் இந்த பச்சடியை காலை வேளை உணவாக  சாப்பிட்டு வந்தால் உடல் பருமனைத் தடுத்து விடலாம்.

இரவு படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு (2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப் போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

“பிகார் வெற்றிக்கு SIR தான் காரணம்!” சீமான் பேட்டி | Trichy | NTK

அறக்கேட்டை உணர்ந்தால்...

ஜஸ்பிரித் பும்ராவுக்கு முதல் ஓவரை கொடுக்காதது ஏன்? அனில் கும்ப்ளே கேள்வி!

பேக்கரி பொருள்கள் தயாரித்தல் பயிற்சிக்கு விண்ணப்பிப்பது எப்படி?

மகாராஷ்டிரத்தில் தேசியவாத காங். தலைவர் பாஜகவில் ஐக்கியம்!

SCROLL FOR NEXT