உடல் எடை குறைப்பு மற்றும் கொழுப்பைக் கரைக்கும் ஆற்றல் மிக்க பானம்
முதலில் பப்பாளி துண்டுகள், பைன் ஆப்பிள் துண்டுகள், ஊற வைத்த வெந்தயம் ஆகிய மூன்றையும் மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும்.
பப்பாளி - பைன் ஆப்பிள் பானம்
தேவையான பொருட்கள்
நன்கு கனிந்த பப்பாளி துண்டுகள் - 100 கிராம்
பைன் ஆப்பிள் பழத் துண்டுகள் - 100 கிராம்
ஊற வைத்த வெந்தயம். - 25 கிராம்
எலுமிச்ச பழச்சாறு தோலோடு - 50 மி.லி
தேன் - 3 தேக்கரண்டி
செய்முறை : முதலில் பப்பாளி துண்டுகள், பைன் ஆப்பிள் துண்டுகள், ஊற வைத்த வெந்தயம் ஆகிய மூன்றையும் மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும். பின்பு அதனுடன் எலுமிச்ச பழச்சாறு மற்றும் தேன் கலந்து நன்றாக கலக்கி அருந்தவும்.
Advertisement
Advertisement
பலன்கள் : இந்த பானம் உடல் எடை குறைப்பிற்கு சிகிச்சை எடுப்பவர்கள் எடுக்கும் உணவில் இணை உணவாக மதிய வேளை எடுத்துக் கொண்டால் உடலில் உண்டாகியிருக்கின்ற தேவையற்ற கொழுப்பை கரைத்து உடல் எடையைக் கணிசமாகக் குறைக்கும்.
குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.
கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala15@gmail.com
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.