உணவே மருந்து

மலச்சிக்கல் மற்றும் பசியின்மையை குணமாக்க இது உதவும்

முதலில் பிரண்டைத் தண்டுகளை எண்ணெய் விட்டு நன்றாக வதக்கவும்.

கோவை பாலா

பிரண்டைத் தண்டுப் பொடி

தேவையான பொருட்கள்

பிஞ்சு பிரண்டைத் தண்டுகள் - 150 கிராம் (நார் இல்லாதது)
தேங்காய்த் துருவல் - 25 கிராம்
மிளகு - 5 கிராம்
தனியா - 5 கிராம்
புளி - 20 கிராம்
நல்லெண்ணெய் - தேவையான அளவு       

செய்முறை : முதலில் பிரண்டைத் தண்டுகளை எண்ணெய் விட்டு நன்றாக வதக்கவும். பின்பு அதனுடன் தேங்காய்த் துருவலையும் சேர்த்து வதக்கிக் கொள்ளவும். தனியாவை தனியாக வறுத்து அதனுடன் புளிக்கரைசலை சேர்த்து நன்றாக இடித்துக் கொள்ளவும்.

அனைத்தையும் ஒன்றாக சேர்த்து மிக்ஸியில் போட்டு ஒன்றிரண்டாக இடித்துக் கொள்ளவும். இந்த முறை 10 நாட்கள் வரை கெட்டுப் போகாமல் இருக்கும்.

பயன்கள் : இந்த பொடியை இரவு வேளை உணவில் வயது வேறுபாடின்றி அனைவரும் எடுத்துக் கொள்ளலாம். இதனால் மூலநோய், தீராத மலச்சிக்கல், வயிற்றுப் புழு, பசியின்மை, குடற்புண் ஆகிய கோளாறுகளை சீர் செய்யும் உகந்த உணவுப் பொடி. இந்தப் பொடியை இட்லி, தோசை, சப்பாத்தி ஆகியவற்றிற்கு துணை உணவாக எடுத்துக் கொள்ளலாம்.

இரவு படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு(2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப் போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வீட்டின் தடுப்புச் சுவா் சரிந்து விழுந்ததில் தொழிலாளி உயிரிழப்பு

தேசிய குருதிக் கொடையாளா் தின விழா

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி: இன்று முதல் கணக்கெடுப்புப் படிவம் விநியோகம்

தேனி, வீரபாண்டியில் நாளை மின் தடை

பழனி அருகே காா் கவிழ்ந்து பெண் உயிரிழப்பு

SCROLL FOR NEXT