முகப்பு
உணவே மருந்து

தாய்ப்பாலை அதிகமாக சுரக்க வைக்க உதவும் ஆரோக்கியமான கஞ்சி

முதலில் கேரட் மற்றும் பூண்டை நறுக்கி நீராவியில் வேக வைத்துக் கொள்ளவும்.

Updated On : 29 அக்டோபர், 2019 at 8:51 AM
பகிர்:
Updated On : 31 ஜனவரி, 2024 at 4:03 PM

பூங்கார் அரிசி பூண்டுக் கஞ்சி

தேவையான பொருட்கள்

பூங்கார் அரிசி - 150  கிராம்
பூண்டு - 50 கிராம்
பாசிப் பருப்பு - 50  கிராம்
கேரட் - 25  கிராம்
மோர் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

Advertisement

செய்முறை

  • முதலில் கேரட் மற்றும் பூண்டை நறுக்கி நீராவியில் வேக வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதில் பாசிப் பருப்பை போட்டு கொதிக்க வைக்கவும்.
  • நன்கு கொதிநிலை வந்தவுடன் பூங்கார் அரிசியைச் சேர்த்து நன்கு வேக வைக்கவும்.
  • நன்கு வேக வைத்து கஞ்சி பதம் வந்தவுடன் நீராவியில் வேக வைத்த பூண்டு, கேரட் மற்றும் தேவையான அளவு உப்புச் சேர்த்து கலக்கி இறக்கி வைக்கவும்.
  • பின்பு தேவைப்பட்டால் அதனுடன் மோர் சேர்த்து  குடிக்கவும்.

பயன்கள்

இந்தக் கஞ்சியை தாய்ப் பால் சுரப்பு குறைவாக உள்ள தாய்மார்கள் காலை, மாலை என இருவேளையும் குடித்து வந்தால் தாய்ப் பால் சுரப்பு அதிகரிக்கும் ஆற்றல் நிறைந்தக் கஞ்சி.

தினமும் இரவு படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு(2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வரமிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala15@gmail.com
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.