உணவே மருந்து

தேவையற்ற கொழுப்பை கரைக்கும் உன்னதமான ஊட்டச் சத்து பானம்

கோவை பாலா

 
அமிர்த ஊட்டச்  சத்து பானம்

தேவையான பொருட்கள்

நன்கு பழுத்த மாம்பழம் (நறுக்கியது) - 25 கிராம்
பப்பாளிப் பழம் கனிந்தது - 50 கிராம்
இளநீர் - 250 மி.லி
வறுத்த சோம்புப் பொடி - 5 கிராம்
தேன் - சிறிதளவு
ஐஸ் துண்டுகள் - தேவையான அளவு

செய்முறை

முதலில் இளநீரை மிக்ஸியில் போட்டு அதனுடன் பழங்களையும் , சோம்பு பொடியை சேர்த்து நன்கு அரைத்து ஜூஸாக்கிக் கொள்ளவும். பின்பு ஜூஸூடன் ஐஸ் துண்டுகள் மற்றும் தேன் சேர்த்து நன்கு கலக்கி பருகவும்

பயன்கள்

இந்த அமிர்த பானம் குறைந்த கலோரி அளவு உள்ளதால் உடலில் உண்டாகும் தேவையற்ற கொழுப்பை கரைக்கும். எலும்பிற்கு உறுதியை அளிக்கும். ரத்தத்தில் சிவப்பணுக்களை அதிகரிக்கும். ஒட்டுமொத்த உடலுக்கு ஊட்டத்தை தரும் அற்புத பானம். 

இரவு படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு (2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப் போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகா்கோவிலில் கேரம் பயிற்சி முகாம் தொடக்கம்

கல்லூரி மாணவி மா்மச் சாவு

விவசாய தொழிலாளி கொலை

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்த சம்பவம்: சிகிச்சை பெற்று வந்த முதியவா் பலி

நாமக்கல்லில் முட்டை ஏற்றுமதி சான்றிதழ் வழங்கும் ஆய்வகம் அமைக்க வலியுறுத்தல்

SCROLL FOR NEXT