உணவே மருந்து

குழந்தைகளுக்கு ஆரோக்கியத்தை அள்ளித் தரும் அற்புத ஜூஸ்

கோவை பாலா

பலாப் பழ ஜூஸ்

தேவையான பொருட்கள்

நன்கு பழுத்த கொட்டை நீக்கிய சிறிதாக அரிந்த பலாச்சுளைகள் - 100 கிராம்

நெல்லிக்காய்ச் சாறு - 25 மி.லி
தேங்காய்ப் பால் - 100 மி.லி
மிளகுத் தூள் - 3 சிட்டிகை
ஏலக்காய்த் தூள் - 3 சிட்டிகை
தண்ணீர் - தேவையான அளவு
தேன் - சிறிதளவு

செய்முறை

முதலில் பலாச் சுளைகளுடன் நெல்லிக்காய்ச் சாறு சேர்த்து மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும். பின்னர் அதனுடன் தேங்காய்ப் பால், மிளகுத் தூள், ஏலக்காய்த் தூள் மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து  ஒன்றாக கலக்கி பருகவும். தேவைப்பட்டால் சிறிதளவு தேன் சேர்த்தும் பருகலாம். 

பயன்கள்

இந்த ஜூஸ் சிறு குழந்தைகள் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு ஆற்றலை அள்ளித் தரும் அற்புத ஜூஸ். குடல் சார்ந்த உபாதைகளை  நீக்கும். ஜீரண சக்திக்கு ஏற்ப எடுத்துக்கொள்வது நன்று.

இரவு படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு (2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப் போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

SCROLL FOR NEXT