உணவே மருந்து

நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற உணவு

கோவை பாலா


கம்பு பசலைக் கீரைக் கஞ்சி

தேவையான பொருட்கள்

கம்பு மாவு வறுத்து அரைத்தது - 10 கிராம்
வேர்கடலை மாவு  வறுத்து அரைத்தது - 10 கிராம்
பசலைக் கீரை - 30  கிராம்

செய்முறை: முதலில் கம்பு மற்றும் வேர்கடலையை நன்கு வறுத்து அரைத்துக் கொள்ளவும். பசலைக் கீரையை நறுக்கி தண்ணீர் ஊற்றி நன்றாக வேகவைத்து அதனை மசித்து ஒரு துணியினால் வடிகட்டவும். வடிகட்டிய பசலைக் கீரைத் தண்ணீரில்  வறுத்து அரைத்து வைத்துள்ள கம்பு மற்றும் வேர்கடலை மாவுவை கலக்கவும். நன்றாக கரைத்து அடுப்பில் வைத்து  கொதிக்கவிடவும். சிறிது கெட்டித் தன்மை வந்தவுடன் இறக்கி வைத்து பருகவும். சர்க்கரை வியாதி இல்லாதவர்கள்  இதனோடு வெல்லத்தை தூளாக்கி சேர்த்து கொதிக்கவைத்து பருகலாம்.

பயன்கள் : இந்தக் கஞ்சியை  நீரிழிவு நோயாளிகள் ஒருவேளை உணவாக எடுத்துக் கொள்ளலாம். அதீத பசியுணர்வை கட்டுப்படுத்தும் ஆற்றல் உள்ள  அற்புதமான கஞ்சி.

இரவு படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு (2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப் போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை திரும்பினார் முதல்வர் ஸ்டாலின்

புது தில்லி-பாகல்பூா் சிறப்பு ரயில் இயக்கத்தில் திருத்தம் வடக்கு ரயில்வே அறிவிப்பு

கூகுளில் அதிகம் தேடப்படும் சுற்றுலா தலங்கள்! உங்களின் தேர்வு இவற்றில் எது?

ஆனந்ததாண்டவபுரம் பஞ்சவடீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

அரசு நிா்வாகம் மூலம் பருத்தி கொள்முதல் செய்ய வலியுறுத்தல்

SCROLL FOR NEXT