உணவே மருந்து

சிறுநீரக கற்கள், சிறுநீர் அடைப்பு போன்ற குறைபாடுகளை நீக்கும் பானம்

கோவை பாலா

நன்னாரி காபி
தேவையான பொருட்கள்

நன்னாரி வேர் - 100 கிராம் 
வெந்தயம் - 25  கிராம் 
சதகுப்பை - 100 கிராம் 

செய்முறை : மேற்கூறிய மூன்று பொருட்களையும் தனித்தனியாக வறுத்து ஒன்றாக கலந்து தூள் செய்து வைத்துக் கொள்ளவும். இதில் ஒரு ஸ்பூன் பொடியை எடுத்து இரண்டு டம்ளர் நீர் விட்டு நன்றாக கொதிக்க வைத்து வடிகட்டி அதனுடன் நாட்டுச் சர்க்கரை அல்லது பனங்கற்கண்டு சேர்த்து தினமும் காலை மற்றும் மாலை என இருவேளையும் குடித்து வரவும்.

பயன்கள் : இதனால் சிறுநீரகத்தில் ஏற்படும் கூடிய சிறுநீரக அழற்சி, சிறுநீரக தொற்று, சிறுநீரக கற்கள், சிறுநீரக பாதையில் ஏற்படக்கூடிய அடைப்பு , சிறுநீரக பாதையில் உண்டாகக் கூடிய சதை அடைப்பு போன்ற குறைபாடுகள் உள்ளவர்கள் நன்னாரி காபியை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ஆதி அற்புத பலனைப் பெறலாம். இடுப்பு வலி மற்றும் முதுகு வலி குணமாகவும், மூல நோய்கள் விலகவும், பற்கள் உறுதி பெற்று உடல் வனப்பை உண்டாக்கும் அற்புதமான ஊட்டச்சத்து மாவு.

தினமும் இரவு படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு (2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala15@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் 104 டிகிரி வெப்பம் சுட்டெரிக்கும்: வானிலை மையம்

'ரசிகனிலிருந்து இயக்குநர் வரை..’: ஆதிக் ரவிச்சந்திரன் நெகிழ்ச்சி

ஜி.எஸ்.டி. வசூல் புதிய உச்சம்!

குஷி ஜோ!

கூலி - இளையராஜா நோட்டீஸ்!

SCROLL FOR NEXT