முகப்பு
உணவே மருந்து

தொண்டைப் புண், வயிற்றுப் புண் ஆகியவற்றை குணப்படுத்த உதவும் கசாயம்

தலில் மணத்தக்காளிக் கீரையை நன்றாக சுத்தப்படுத்தி ஆய்ந்து ஒரு கைப்பிடி அளவு எடுத்துக் கொள்ளவும்.

Updated On : 11 ஜனவரி, 2020 at 11:20 AM
மணத்தக்காளிக் கீரை
பகிர்:

மணத்தக்காளிக் கீரை மாசிக்காய் கசாயம்

தேவையான பொருட்கள்

மணத்தக்காளிக் கீரை ஒரு கைப்பிடி, மாசிக்காய் ஒன்று, மஞ்சள் தூள் சிறிதளவு.

Advertisement

செய்முறை
 

  • முதலில் மணத்தக்காளிக் கீரையை நன்றாக சுத்தப்படுத்தி ஆய்ந்து ஒரு கைப்பிடி அளவு எடுத்துக் கொள்ளவும்.
  • ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதில் மணத்தக்காளிக் கீரை மற்றும் மாசிக்காயை தட்டிப் போட்டு, மஞ்சள் தூள் சிறிதளவு சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும்.
  • நன்கு கொதித்து பாதியாகச் சுண்ட வைத்து வடிகட்டி இறக்கி வைத்துக் கொள்ளவும்.

பலன்கள்
 
இந்தக் கசாயம் தொண்டைப் புண் மற்றும் வயிற்றுப் புண் உள்ளவர்களுக்கு மிகச் சிறந்த பலனை கொடுக்கும்.

இந்தக் கசாயத்தை தினமும் காலை அல்லது மாலை என இருவேளையும்  குடித்து வரவும்.

இரவு படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு(2) , உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து  தினமும் படுக்கப்போகும் முன்  வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு

அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேகவைத்து  உணவாக சாப்பிட்டு வரவும்.

பச்சை மிளகாய்க்கு மாற்றாக  இஞ்சியையும், வரமிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா  
இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  காய்கறி சிகிச்சையாளர்.
Cell : 96557 58609, 73737 10080
Covaibala15@gmail.com

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.