முகப்பு
உணவே மருந்து

பல் வலி, வாய் துர்நாற்றம், ஈறுகளில் ரத்தம் வடிதல் பிரச்னைக்கு அருமருந்து

தீராத பல் வலியை தீர்க்க உதவும் அருமருந்தை பயன்படுத்தி பலனடையுங்கள்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:37 PM
பகிர்:

தீராத பல் வலியை தீர்க்க உதவும் அருமருந்தை பயன்படுத்தி பலனடையுங்கள்.

தேவையான பொருள்கள்

மருதம்பட்டை.            -     25 கிராம்

ஆலம் பட்டை.            -      25 கிராம்

அரசம் பட்டை.            -      25 கிராம்

கருவேலம் பட்டை.    -      25 கிராம்

கொட்டைப் பாக்கு.    -     25 கிராம்

கிராம்பு          -    25 கிராம்

செய்முறை

முதலில் மருதம் பட்டை, ஆலம் பட்டை, அரசம் பட்டை, கருவேலம் பட்டை, கொட்டைப் பாக்கு மற்றும் கிராம்பு ஆகியவற்றை மேற்கூறிய அளவு எடுத்துச் சுத்தப்படுத்தி எடுத்துக் கொள்ளவும். பின்பு ஒவ்வொன்றையும் தனித்தனியாக அரைத்து ஒன்றாகக் கலந்து வைத்துக் கொள்ளவும்.

பயன்கள்

இந்த சூரணம் தீராத பல் வலி, வாய் துர்நாற்றம் மற்றும் ஈறுகளில் அடிக்கடி ரத்தம் வடிதல் போன்ற குறைபாடுகளைப் போக்க உதவும் சூரணம். மேற்கூறிய குறைபாட்டினால் துன்பப்படுபவர்கள் மேற்கூறிய சூரணத்தைத் தயார் செய்து தினமும் காலை மற்றும் இரவு என இருவேளையும் பல் துலக்கி வந்தால் மேற்கூறிய குறைபாட்டிலிருந்து விடுபடலாம்.

குறிப்பு : இந்த சூரணம் பல் துலக்குவதற்கு மட்டுமே!

நீங்கள் எடுத்துக் கொண்டியிருக்கிற மருந்துகளோடு இதனை  எடுத்துக் கொள்ளலாம்.

இரவு படுக்கப் போகும் முன்

வெற்றிலை (2), மிளகு(2) , உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து  தினமும் படுக்கப்போகும் முன்  வாயில் போட்டு மென்று தின்று விழுங்கவும்.

குறிப்பு

அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேகவைத்து   உணவாகச் சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக  மிளகையும் பயன்படுத்தவும்.

- கோவை பாலா,

இயற்கை மருத்துவம் மற்றும் உணவு வழி(காய்கறி) மருத்துவ ஆலோசகர்.

Cell  :  96557 58609   ,  75503 24609
Covaibala15@gmail.com 

Kovai Bala YouTube channel :
https://www.youtube.com/channel/UC8OPbuqkQl4C63ITOCQ1apQ

Telegram குழுவில் இணைய
https://t.me/kovaibalavegetableclinic

முழு கட்டுரையைப் படிக்க →